Home Cinema News தனது 50-வது படமான ‘மகாராஜா’வின் ரிலீஸுக்கு நாள் குறித்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி!

தனது 50-வது படமான ‘மகாராஜா’வின் ரிலீஸுக்கு நாள் குறித்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' வருகிற மே 16-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸாகப்போகிறதாம். இந்த படத்தை 'குரங்கு பொம்மை' புகழ் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார்.

by Naveen Dhayalan

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. இந்த ஆண்டு (2024) பொங்கலுக்கு இவர் நடித்த ‘மெரி கிறிஸ்துமஸ்’ ஹிந்தி, தமிழ் என இரண்டு மொழிகளில் வெளியானது. 

2022 7largeimg 454306900

விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இவர் நடித்து வரும் ‘விடுதலை பார்ட் 2’ மற்றும் ‘மகாராஜா’ ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவே ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ வருகிற மே 16-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸாகப்போகிறதாம். இந்த படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார்.

இதில் மக்கள் செல்வனுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மிக விரைவில் இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.