Home Cinema News அட்லீ தயாரிப்பில் நடிக்கும் விஜய் சேதுபதி… இயக்குநர் யார் தெரியுமா?

அட்லீ தயாரிப்பில் நடிக்கும் விஜய் சேதுபதி… இயக்குநர் யார் தெரியுமா?

by John Kamalesh


கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி‘. இந்த ஆண்டு (2024) பொங்கலுக்கு இவர் நடித்த மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானர் படமான ‘மெரி கிறிஸ்துமஸ்’ ஹிந்தி மற்றும் தமிழில் ரிலீஸானது.

விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இவர் நடித்து வரும் ‘விடுதலை பார்ட் 2’ மற்றும் ‘மகாராஜா’ ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதில் வெற்றிமாறன்’ இயக்கும் ‘விடுதலை பார்ட் 2‘ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கும் ‘மகாராஜா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. 

6295b6bcaf9fd

இந்நிலையில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு யெஸ் சொல்லியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை டாப் இயக்குநரான அட்லீயின் ‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

இப்படத்தை பிரபல இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார். ஏற்கனவே, பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.