வில்லனாக கலக்கி வந்த Vijay Sethupathi தற்போது ஹீரோ இமேஜ் குறைவதால் ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார்.
ஆரம்ப சினிமா வாழ்வில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து தற்போது ஹீரோ, வில்லன் என கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி வருகிறார் Vijay Sethupathi. எதார்த்த நடிப்பின் மூலம் படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ஹீரோவாக நடிக்க தொடங்கிய பின்பு ஒரு சில ஆண்டுகள் 2,3 படங்களில் மட்டும் நடித்து வந்தார். 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு வருடத்திற்கு 5,6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான்க்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்து கலக்கியிருந்தார்.
இந்த ஆண்டில் Vijay Sethupathi நடிப்பில் “Merry Christmas” படம் மட்டுமே வெளியாகியுள்ளது. இன்னும் சில படங்கள் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸ்க்கு காத்துக்கொண்டுள்ளது. கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக காத்துக்கொண்டுள்ளது.
அந்த வகையில் விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா படத்தின் Trailer வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தில் ட்ரைலரில் மிரட்டியுள்ளார் விஜய் சேதுபதி. இயக்குனர் நிதிலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ள படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், அமிராமி, மம்தா மோகன் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அண்மையில் விஜய் சேதுபதியின் “Ace” படத்தின் டீஸர் வெளியானது. அறுமுககுமார் கதை எழுதி தயாரித்து இயக்கவுள்ள இந்த படத்தில் யோகி பாபு, ருக்மணி வசந்த், பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஸ், திவ்யா பிள்ளை ஆகியோரும் நடித்துள்ளார். இந்த படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கவுள்ள படம் Train. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவையும் நிலையில் உள்ளது. கலைபுலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளார். இந்த படமும் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படம் “Gandhi Talks”. படத்தின் அப்டேட்க்கள் விரைவில் வெளியாகும். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் “இடம் பொருள் ஏவல்” படம் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆவதில் பிரச்சனைகள் வந்துள்ளது. பிரச்னை சுமுகமாக முடிந்து இந்த ஆண்டு படம் ரிலீஸ் ஆகலாம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 1 வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன் இரண்டாவது பாகம் எடுக்கும் பணியில் இருந்த வெற்றிமாறன் கிட்டத்தட்ட படத்தின் வேலைகளை முடித்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் பாதியில் சேதுபதி படங்கள் வரவில்லை என்றாலும் இரண்டாவது பாதியில் 5,6 படங்கள் வெளியாக காத்துக்கொண்டுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]