Home Cinema News விஜய்யின் மகன் Jason Sanjay இயக்குனராக அவதாரம்!

விஜய்யின் மகன் Jason Sanjay இயக்குனராக அவதாரம்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தனது தந்தையின் வழியில் நடிகராக நுழையாமல், இயக்குனராக படம் இயக்கவுள்ளார்.

by Vinodhini Kumar

நடிகர் விஜய் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சியில் இருந்து வருகிறார். அவரின் வாரிசான Jason Sanjay, தற்போது சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். அப்படி சில மாதங்களுக்கு முன் வெளியான தகவல் படி பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்துடன் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். 

Jason Sanjay

இந்த படத்தில் நடிப்பவர்கள் யார்? இசையமைப்பாளர் யார்? அந்த படம் ஆக்க்ஷன் படமாக உருவாகுமா? என பல கேள்விகள் எழும்பியது. அதிலும் முக்கியமாக நடிகர் விஜய் அரசியலில் நுழைந்ததால் அவரின் ரசிகர்கள் அனைவரும் Jason Sanjay உடைய சினிமா பயணத்தை பற்றி பல செய்திகளை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். 

Jason Sanjay with Aditi Shankar and family

அப்படி சமீபத்தில் Jason Sanjay இயக்கும் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், கதாநாயகியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார் அன்று ஒரு செய்தி கசிந்தது. இந்த தகவல் வெளியானதும் பலரும் இயக்குனர் ஷங்கரின் மக்கள் திருமணத்தில் ஜேசன் சஞ்சய் அவரின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து இந்த தகவலை பரப்பினார்கள். 

இந்த படத்தின் இசையமைப்பாளராக இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகன் ஏ ஆர் அமீன் இணைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது ட்ரெண்டாக முக்கிய காரணம்,  குறிப்பிடப்பட்ட அனைவருமே சினிமா வாரிசுகள் என்பதால் தான். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஏற்கனவே நாயகனாக சில படங்களில் நடித்துள்ளார். 

Nepotism தமிழ் சினிமாவில் உண்டா? 

பிரம்மாணட இயக்குனர் ஷங்கரின் மக்கள் அதிதி ஷங்கரும் 2021ல் ‘விருமன்’ படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் தற்போது Jason Sanjay இயக்கம் படத்தில் முன்னணி பிரபலங்களின் வாரிசுகள் நடிக்கும் செய்தி வைரலாகி வருகிறது. 

Kavin

இந்த பெயரிடப்படாத படத்தில் முதலில் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக தேர்ந்தெடுத்து கதை சொன்னது இளம் நடிகர் கவினிடம். இதை பற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூட நடிகர் கவின் பேசியிருப்பார். அப்படி இந்த படத்தில் நடிகர் கவின் நடிப்பது உறுதியாகியிருந்தால், Nepotism என்ற பேச்சு எழுந்திருக்காது.

ஏற்கனவே சிறிய குறும்படங்களை இயக்கிய ஜேசன் சஞ்சய் தற்போது பெரிய திரையில் களமிறங்குவது கண்டிப்பாக அவரை சுற்றி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.      

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.