Home Cinema News GOAT படத்தில் டபுள் ட்ரீட் தரும் Vijay…

GOAT படத்தில் டபுள் ட்ரீட் தரும் Vijay…

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடி அசத்தும் தளபதி VIJAY...

by Sudhakaran Eswaran

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடி அசத்தும் தளபதி VIJAY…

VIJAY, வெங்கட் பிரபு கூட்டணியில் GOAT படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் பல அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த படம் செப்டம்பர் 5-ல் வெளியாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்திற்குப் பின்னர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் யுவன். 

Untitled design 5 10

இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான விசில் போடு பாடல் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர். விஜய், பிரசாந்த், பிரபுதேவா ஆகிய மூவரும் டான்ஸில் கலக்கியுள்ளார். முதல் பாடல் சரியாக அமையாததால் இனிவரும் பாடல்களில் விஜய்க்காக யுவன் ஸ்பெஷலாக சம்பவம் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.  

தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் ஒரு படலாவது VIJAY பாடி வருகிறார். அந்த பாடல்கள் ஹிட் அடித்தும் உள்ளது.  அந்த வகையில் GOAT படத்தில் விஜய் இரண்டு பாடல்கள் பாடவுள்ளதாக தெரிகிறது. இது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு முன்பு 1999-ல் வெளியான பெரியண்ணா படத்தில் 3 பாடல்கள் பாடியிருந்தார். அதற்க்கு பிறகு படத்திற்கு ஒரு பாடல் மட்டுமே படிவந்தார். 

படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. வயதான மற்றும் இளமையான கதாப்பாத்திரங்கள். இந்த இரண்டு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

GOAT படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதாகவும், வெங்கட் பிரபு மற்றும் சிவகார்திகேயன் ஆகியோர் GUEST ரோலில் வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பதின் மூலம் சிறப்பு தோற்றத்தில் வர வைக்க உள்ளதாகவும் தெரிகிறது. படம் ரிலீஸ் செய்யும் முன்பு பல அப்டேட்கள் வந்து கொண்டே உள்ளன.   

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.