இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் Vijayakanth என்ற மனிதர் மக்கள் மனதில் இருந்துகொண்டே இருப்பார்.
தனது வாழ்நாளை மக்களுக்காகவும், திரைத்துறைக்காகவும் தியாகம் செய்த கேப்டன் “Vijayakanth” அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நம்மை விட்டு பிரிந்தார். இறந்த பின்னர் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த இன்னும் ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது இந்திய அரசால் கேப்டன் அவர்களுக்கு “பத்ம பூஷன்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றிகண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் விஜயகாந்த் சினிமா துறையில் நடிகர் சங்க தலைவராக இருந்து தம்மால் முடிந்த வரை கலை துறையை சேர்ந்தவர்களுக்கு உதவி செய்து வந்தார். அதே போல 2006 முதல் தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.
இவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்ட கேப்டன் விஜயகாந்த் அவர்களை கருப்பு எம்.ஜி ஆர், புரட்சி கலைஞர் என மக்கள் கொண்டாடி வந்தனர். இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மே 9-ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக்கொண்டார். விருதை பெற்ற பின்னர் பிரேமலதா விஜயகாந்த் இந்த விருதை விஜயகாந்த் அவருக்கே சமர்ப்பிப்பதாக கூறியிருந்தார்.
விஜயகாந்த்க்கு வழங்கப்பட விருதுக்கு திரை துறையை சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்க முடியாது. அவரை மிஸ் பண்ணுவதாகவும் “மதுரை வீரன் விஜயகாந்த்” எனவும் பாராட்டியிருந்தார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com