Home Cinema News போலீஸ் அதிகாரியாக அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த Vijayakanth-ன் படங்கள்…  

போலீஸ் அதிகாரியாக அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த Vijayakanth-ன் படங்கள்…  

Vijayakanth என்றாலே காக்கி சட்டையுடன், கம்பிரமான குரல், ராஜநடை, மிரட்டல் பேச்சு என போலீஸ் கேரக்டருக்கு அளவெடுத்து செய்ததை போல தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சேவைகளை செய்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.  

by Sudhakaran Eswaran

Vijayakanth என்றாலே காக்கி சட்டையுடன், கம்பிரமான குரல், ராஜநடை, மிரட்டல் பேச்சு என போலீஸ் கேரக்டருக்கு அளவெடுத்து செய்ததை போல தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சேவைகளை செய்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.  

Vijayakanth தமிழ் சினிமாவில் எண்ணற்ற கேரக்டரில் நடித்திருந்தாலும் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் போது சமூகத்திற்க்காகவும், நாட்டுக்காகவும் பேசும் வசனங்கள் மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவரின் குரலாக இருக்கும். 

Vijaykanth

அப்படி விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய படங்கள் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. Vijayakanth என்றாலே போலீஸ் என்று மனதில் பதியும் அளவிற்கு திரை வாழ்வில் போலீஸ் கேரக்டரில் நடித்தது மட்டுமல்லாது அந்த கேரக்டராகவே வாழ்ந்து வந்துள்ளார்.  

அப்படி போலீஸ் அதிகாரியாக மிரட்டிய படங்கள். 

ஊமை விழிகள்:

1986-ல் அரவிந்தராஜ் இயக்கத்தில் Vijayakanth அவர்களின் கம்பிரமான தோற்றத்தில் வெளியான படம் ஊமை விழிகள். DSP தீனதயாளன் கேரக்டரில் மிரட்டல் சம்பவம் செய்திருப்பார். அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, மலேசியா வாசுதேவன் போன்றோர் நடித்திருந்தனர். ரிலீஸ் ஆனா சமயம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

மாநகர காவல்:

Vijayakanth as a Police
Source: AVM Productions

1991-ல் M. தியாகராஜன் இயக்கத்தில் AVM ப்ரொடக்சன் தயாரிப்பில் Vijayakanth -ன் 150-வது படமாக “மாநகர காவல்” வெளியானது. போலீஸ் அதிகாரியாக ACP சுபாஷ் IPS கேரக்டரில் நாட்டின் பிரதமராக இருக்கும் லட்சுமியை கொலை செய்ய நினைக்கும் கும்பலிடமிருந்து அவரை காப்பாற்றுவார். சுமன், நம்பியார், லட்சுமி, நாசர், ஆனந்த் ராஜ், வைஷ்ணவி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். படம் பெரும் வரவேற்பை பெற்றது.     

கேப்டன் பிரபாகரன்:

Captain Prabhakaran
Source: Kumudam

1991-ல் போலீஸ் அதிகாரியாக மற்றுமொரு சம்பவம் செய்த படம் “கேப்டன் பிரபாகரன்”. RK. செல்வமணி இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் ” கேப்டன் பிரபாகரன்” என்ற பெயரில் IFS அதிகாரியாக நடித்திருப்பார். சரத் குமார், லிவிங்ஸ்டன், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான், நம்பியார் போன்றோர் நடித்திருந்தனர். கேப்டன் என்று செல்லமாக கூறப்படும் விஜயகாந்த் அவர்களுக்கு பெயர் வாங்கிக்கொடுத்த படமாக இருந்தது. 

தர்மம் வெல்லும்:

K. ரங்கராஜ் இயக்கத்தில் 1989-ல் Vijayakanth இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம் “தர்மம் வெல்லும்”. இன்ஸ்பெக்டர் K. ஜெகநாத் கேரக்டர் மற்றும் விஜய் என இரண்டு வேடத்தில் சுஜாதா மற்றும் கௌதமி என  இருவருக்கும் ஜோடியாக நடித்திருப்பார். இளையராஜா இசையில் S.P. பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா கூட்டணியில் பாடல்கள் ரசிக்கும் படியாக இருக்கும்.  

புலன்விசாரணை:

Pulan Visaranai poster

1984-ல் வெளிவந்த “புலன்விசாரணை” திரைப்படத்தில் நேர்மையான மற்றும் தைரியமான போலீஸ் அதிகாரியான அவரது நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. DCP ஹானஸ்ட் ராஜ் IPS கேரக்டரில் நடித்திருப்பார். ரூபிணி, சிந்து, நம்பியார், ராதா ரவி, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்திருப்பார்கள். RK. செல்வமணி தயாரிப்பில் இளையராஜா இசையில் வெளியானது. 

சேதுபதி IPS:

விஜயகாந்த் ஒரு தைரியமான மற்றும் லஞ்சம் ஒழிப்பு போலீஸ் ஆக நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. P. வாசு இயக்கத்தில், இளையராஜா இசையில் மீனா, நம்பியார், ஸ்ரீவித்யா, காவேரி, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். கவுண்டமணி, செந்தில்  கூட்டணியில் காமெடி கலக்கலாக இருக்கும். 1994-ல் பொங்கல் சமயம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று அந்த தசாப்பத்தில் மெஹா ஹிட் அடித்த படமாக இருந்தது.  

சத்ரியன்:

1990 -ல் வெளியான சத்ரியன் படத்தில் கோவமான, ஆக்ரோஷமான போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வமாக நடித்திருப்பார். அசத்தலான நடிப்பையும், படத்தில் வரும் மறக்க முடியாத வசனங்கள் என படத்தின் வெற்றிக்கு உதவியது. இந்த படத்திற்கு இயக்குநர் மணிரத்னம் எழுதி, இயக்குநர் கே.சுபாஷ் இயக்கத்தில் வெளிவந்தது. நடிகர் திலகனுக்கும் விஜயகாந்த்துக்கும் இடையிலான வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். போலீஸ் வேலையில் இருந்து விலகிச் சென்ற விஜயகாந்தை வம்புக்கு இழுக்கும் திலகனின் நடிப்பும், மீண்டும் போலீஸ் வேலையில் சேர விஜயகாந்த் எடுக்கும் முயற்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனஸ்ட்ராஜ்: 

1994-ஆம் ஆண்டு வெளியான ஆனஸ்ட்ராஜ் திரைப்படத்தில் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் துரோகம் செய்யும் போது அதைதாங்க முடியாமல் விஜயகாந்த் நடிக்கும் நடிப்பு பாராட்டும் படியாக இருந்தது. கௌதமி, மனோரமா, செந்தில், தேவன், விஜயகுமார் ஆகியோர் நடித்திருப்பார்கள். 

ராஜநடை:

Rajanadai poster

SA. சந்திரசேகர் இயக்கத்தில், MS. விஸ்வநாதன் இசையில் 1989-ல் வெளியான படம் ராஜநடை. CID இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் கேரக்டரில் மற்றுமொரு சம்பவம் செய்த படம். கௌதமி, சீதா, வித்யாஸ்ரீ, ராதா  நடித்திருந்தனர். 

சிவந்த கண்கள்:

1982-ல் முதன் முதலில்  போலீஸ் அதிகாரியாக ராமா நாராயணன் இயக்கத்தில் நடித்த படம் “சிவந்த கண்கள்”. இன்ஸ்பெக்டர் விஜய் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். உஷா, சில்க் சுமிதா, VK.ராமசாமி ஆகியோர் நடித்திருப்பார்கள். 

விஜயகாந்த் நடித்த படங்களில் போலீஸ் அதிகாரியாக சாட்சி படத்தில் இன்ஸ்பெக்டர் விஜய்யாகவும், ஜனவரி 1 படத்தில் இன்ஸ்பெக்டர்  மனோவாகவும், நீதியின் மறுபக்கம் படத்தில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகவும், புதிய தீர்ப்பு படத்தில் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகவும், சிறைப்பறவை படத்தில் DCP ராஜசேகரன் ஆகவும், வீரன்வேலுதம்பி படத்தில் இன்ஸ்பெக்டர் ரஹ்மான் ஆகவும், காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் ஆகவும் நடித்திருந்தார். 

Vijayakanth in a Cop story

மேலும் பொறுத்தது போதும் படத்தில் இன்ஸ்பெக்டர் வல்லரசு ஆகவும், அலெக்ஸாண்டர் படத்தில் அலெக்ஸாண்டர் IPS ஆகவும், வீரம் வெளஞ்ச மண்ணு படத்தில் DSP விஜய் ஆகவும், வல்லரசு படத்தில் DCP வல்லரசு ஆகவும், வாஞ்சிநாதன் படத்தில் DCP வாஞ்சிநாதன் ஆகவும், தேவன் படத்தில் ரத்னவேலு IPS ஆகவும், அரசாங்கம் படத்தில் IPS அறிவரசு ஆகவும் நடித்திருந்தார். 

மக்களுக்காக சேவை செய்யக்கூடிய நேர்மையான போலீஸ் அதிகாரி எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு விஜயகாந்த் படத்தில் வரும் போலீஸ் கேரக்டர்கள் ஆக சிறந்த எடுத்துக்காட்டு. “சத்திரியனுக்கே சாவே இல்லை” என்ற வசனம் அவர் மண்னுலகை விட்டு பிரிந்தாலும் அவரது நினைவுகள் மக்கள் மனதில் எப்போதும் இருந்து வாழ்ந்து வருகிறார் கேப்டன். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.