கட்சிக்கொடிக்கான பாடல் மற்றும் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய பிறகு அடுத்தகட்ட நகர்வாக தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டு தேதி அக்டோபர் 27 என தவெக தலைவர் Vijay அறிவித்துள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான Vijay பிப்ரவரியில் கட்சி பெயரை அறிமுகப்படுத்தி நேரடி அரசியலில் குதித்தார். Vijay – ன் அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களுக்கு புது உத்வேகத்தை தந்தது என்றே கூறலாம். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 10 படங்களும் ஏதேனும் ஒரு வகையில் அரசியல் பேசப்பட்டு, ரிலீஸ் செய்வதில் சிக்கல் வந்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் எந்த மாதிரியாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பெரிய பேசுபொருளாக மாறியது. கட்சியை அறிமுக படுத்திய பிறகு உறுப்பினர் சேர்க்கை, CAA சட்டத்திற்கு எதிரான அறிக்கை, பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியது, தலைவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிப்பது என அரசியல் கட்சித்தலைவர்க்கு உண்டான மாண்பை கடைபிடித்து வந்தார்.

ஆகஸ்ட் 22 -ல் பனையூரில் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்து, கொடிக்கான பாடலையும் வெளியிட்டிருந்தார். கட்சி பெயரை அறிமுகம் செய்த நாளில் இந்திய தேர்தல் ஆணையத்தில் “தமிழக வெற்றிக்கழகம்” என்ற அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்திருந்தனர். தமிழக வெற்றிக்கழகத்தை அதிகாரபூர்வ கட்சியாக அறிவித்து தேர்தல் அரசியலில் பங்கு பெரும் கட்சியாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.
சமீபத்தில் அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, பெரியார் சிலைக்கு மரியாதை அளித்திருந்தார். GOAT படத்தின் ரிலீஸை தொடர்ந்து விஜய் 69 படத்தின் அப்டேட் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் vijay 69 படத்தை அதிக அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.


கட்சியின் முதல் மாநாடு தேதி அறிவிப்பு குறித்து செய்திகள் வருமா? என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிக்கு அருகில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் வரும் அக்டோபர் 27 -ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
— TVK Vijay (@tvkvijayhq) September 20, 2024
கட்சியின் அறிவிப்பில் இதுவரை இருந்த விஜய்யின் புகைப்படம் மாற்றப்பட்டு கொடி அறிமுகவிழாவில் கலந்துகொண்ட புகைப்படம் தமிழக வரைபடத்துடன் கட்சி கொடியும் இடம்பெற்றுள்ளது. இந்த முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை, விஜய்க்கு அடுத்தபடியான தலைவர்கள், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் போன்றவை அறிவிக்கப்படும். இந்த மாநாட்டை விஜய் ரசிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமே விஜய்யின் அரசியல் மாநாட்டை எதிர்பார்த்துக்கொண்டுள்ளது.
முதல் மாநாட்டை தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆதரவும், ஆசியும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என விஜய் தெரிவித்திருந்தார். மாநாட்டில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள், யாருக்கெல்லாம் அழைப்பு விடுப்பார்கள் என விஜய்யின் அடுத்த நகர்வை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]