Home Cinema News ‘The GOAT’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்கேட்டிங்கில் செல்லும் விஜய்… வைரலாகும் வீடியோ!

‘The GOAT’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்கேட்டிங்கில் செல்லும் விஜய்… வைரலாகும் வீடியோ!

'The GOAT' படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ஸ்கேட்டிங்கில் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

by Naveen Dhayalan

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் கைவசம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69‘ என இரண்டு படங்கள் மட்டுமே இருக்கிறது.  

இதில் ‘The GOAT’ படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ஸ்கேட்டிங்கில் செல்லும் வீடியோவை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ விஜய் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் மைக் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, அஜ்மல், யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் ஆகியோர் நடிக்கிறார்கள். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரித்து வரும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.