Home Cinema News ‘தளபதி 69’லிருந்து விலகிய ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம்… இதனால் அதிரடி முடிவெடுத்த விஜய்!

‘தளபதி 69’லிருந்து விலகிய ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம்… இதனால் அதிரடி முடிவெடுத்த விஜய்!

by Naveen Dhayalan

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் இப்போது ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து வருகிறதாம்.

இப்படம் இந்த ஆண்டு (2024) செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கப்போகும் ‘தளபதி 69′ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது

கோலிவுட்டில் போடப்படும் தண்டோராவில், இந்த படத்தை ஹெச்.வினோத் தான் இயக்குவார் என அடித்துச் சொல்கிறார்கள். சமீபத்தில், விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் பெயரை அறிவித்ததுடன், ‘தளபதி 69’ஏ தனது கடைசி படம் என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் D.V.V. தானய்யாவின் ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கூறப்பட்டது. தற்போது, இந்நிறுவனம் இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலகி விட்டதாகவும், விஜய்யே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.