Home Cinema News விஜய்யின்  GOAT  படத்தை வாங்காத  சன் டிவி…. ஜீ தமிழுக்கு கைமாறியது ஏன்?

விஜய்யின்  GOAT  படத்தை வாங்காத  சன் டிவி…. ஜீ தமிழுக்கு கைமாறியது ஏன்?

இதற்கு முன்பு 'மெர்சல்' படத்தை சன் டிவி வாங்கவில்லை. அதன்பிறகு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சன் டிவி வாங்காத GOAT படத்தை ஜீ தமிழ் வாங்கியிருக்கிறது.

by Santhiya Lakshmi

வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் ‘GOAT’ என அழைக்கப்படும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப்படத்தின் கடைசிகட்ட ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்துவரும் நிலையில் படத்துக்கான வியாபார வேலைகள் முழூமூச்சில் நடந்துவருகிறது. இதன்படி சேட்டிலைட் டிவி உரிமையை யார் வாங்குவது என்கிற போட்டியில் ஜீ தமிழ் வென்றிருக்கிறது.

Untitled design 54

விஜய்யின் படங்களை எப்போதுமே சன் டிவிதான் வாங்கும். ஆனால், ‘ஜெயிலர்’ பட வெளியீட்டின்போது ரஜினியைத் தூக்கிப்பிடித்தும், விஜய்யை தாழ்த்தியும் மறைமுகமாக கலாநிதி மாறன் பேசியது விஜய்க்குப்பிடிக்கவில்லை என்கிறார்கள். ‘ஜெயிலர்’ பாடல் வெளியீட்டின்போது ”ரஜினி மட்டும்தான் தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார். அவர் இடத்துக்கு யாருமே வரமுடியாது” என கலாநிதி மாறன் பேசியதை விஜய் ரசிக்கவில்லை என்கிறார்கள். ”நான் நடித்த படத்தை வாங்கி டிவியில் போட்டு கோடி கோடியாக சம்பாதித்தவர், இப்படி அசிங்கப்படுத்தி பேசுகிறாரே”  என நண்பர்களிடம் புலம்பினாராம் விஜய்.

சன் டிவி மீது விஜய் வருத்தத்தில் இருக்க, விஜய் மீதும் சன் டிவி வருத்தத்தில் இருக்கிறதாம். ‘பீஸ்ட்’ பட தயாரிப்பின்போது விஜய்க்கும், சன் டிவி கலாநிதி மாறனுக்கும் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் அதனால்தான் ‘ஜெயிலர்’ வெளியீட்டின்போது கலாநிதி மாறன் அப்படி ரஜினியை உயர்த்திப்பேசினார் என்றும் சொல்கிறார்கள். அத்தோடு இப்போது திமுக-வை எதிர்த்து விஜய் தேர்தலில் நிற்பதால் சன் டிவியும் விஜய்யோடு பிசினஸ் வைத்துக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறதாம்.

De Aging செய்ய அமெரிக்கா பறந்த விஜய்…  ‘GOAT’ படத்தில் ‘காதலுக்கு மரியாதை’ விஜய்யை பார்க்கலாமாம்!

இதனால் GOAT படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் வாங்கியிருக்கிறது. இதற்கு முன்பு தேணாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்த ‘மெர்சல்’ படத்தை சன் டிவி வாங்கவில்லை. இதேப்போல் ஜீ தமிழ்தான் அந்தப்படத்தை வாங்கியது. அதன்பிறகு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சன் டிவி வாங்காத விஜய் படத்தை ஜீ தமிழ் வாங்கியிருக்கிறது.

GOAT படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் 60 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.