Home Cinema News வெளியானது ‘The GOAT’ படத்தில் விஜய் பாடிய பாடலின் ப்ரோமோ வீடியோ!

வெளியானது ‘The GOAT’ படத்தில் விஜய் பாடிய பாடலின் ப்ரோமோ வீடியோ!

'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் விஜய் பாடியிருக்கும் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

by Santhiya Lakshmi


கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்‘ (The GOAT) மற்றும் ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69‘ என 2 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

தற்போது, ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக்கின் ப்ரோமோ வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘தளபதி’ விஜய் பாடியிருக்கும் இப்பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். இதன் முழு வெர்ஷனை நாளை (ஏப்ரல் 14-ஆம் தேதி) மாலை 6 மணிக்கு தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மைக் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, அஜ்மல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் இந்த ஆண்டு (2024) செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.