Home Cinema News விஜய்யின் ‘The GOAT’ முதல் சிங்கிள் டிராக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

விஜய்யின் ‘The GOAT’ முதல் சிங்கிள் டிராக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

விஜய்யின் 'The GOAT' முதல் சிங்கிள் டிராக் ரிலீஸ்!!

by Santhiya Lakshmi

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் கைவசம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்‘ (The GOAT) மற்றும் ‘தளபதி 69‘ ஆகிய இரண்டு படங்கள் வைத்திருக்கிறார். இதில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். 

இந்த படத்தில் விஜய் இரண்டு வித்தியாசமான வேடங்களில் வந்து மாஸ் காட்டப்போகிறாராம். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா மற்றும் பலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் ரஷ்யாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கை நாளை (ஏப்ரல் 14-ஆம் தேதி) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை கன்ஃபார்ம் பண்ணும் வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் “நாளை சம்பவம் உறுதி” என்றும், ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில்  “GOAT’S FIRST SINGLE-க்கு ARE YOU READY?” என்றும் பதிவிட்டுள்ளனர்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.