Home Cinema News The GOAT’ ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் பண்ண விஜய்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

The GOAT’ ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் பண்ண விஜய்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Thalapathy Vijayயின் G.O.A.T படத்தின் புதிய Update

by John Kamalesh

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் கைவசம் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69’ ஆகிய 2 படங்கள் உள்ளது.  

இதில் ‘The GOAT’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார். இப்படத்தின் ரிலீஸுக்காக விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தற்போது, இந்த படத்தை வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது. இத்தகவலை விஜய்யே தனது எக்ஸ் பக்கத்தில் இப்பட்டத்தின் அசத்தலான போஸ்டரை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

இப்போஸ்டர் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மைக் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.