Home Cinema News விஜய் – மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடிக்கும் ‘The GOAT’… வெளியானது சூப்பரான அப்டேட்!

விஜய் – மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடிக்கும் ‘The GOAT’… வெளியானது சூப்பரான அப்டேட்!

by John Kamalesh

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் கைவசம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் படம் என இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது.  

இதில் ‘The GOAT‘ படத்தை பிரபல நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறாராம்.

Vijay 1

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் மைக் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, அஜ்மல், யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் ஆகியோர் நடிக்கிறார்கள். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துக் கொண்டிருக்கிறார், சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.  

தற்போது, இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் மற்றும் இப்படக்குழுவினர் துபாய்க்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலையில் இருந்து விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிக்  கொண்டிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.