கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடிக்கும் புதிய படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT)-ஐ ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
#WhistlePodu 💛https://t.co/mrX0dKcjzz#GoatFirstSingle #TheGreatestOfAllTime ⁰⁰@actorvijay Sir ⁰#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @dhilipaction @actress_Sneha #Laila @meenakshiioffl… pic.twitter.com/A1olyVw6vN
— Archana Kalpathi (@archanakalpathi) April 14, 2024
நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் இரண்டு வித்தியாசமான ரோல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மைக் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி ஆகியோர் நடிக்கிறார்களாம்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார், வெங்கட் ராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 14-ஆம் தேதி) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தில் இடம்பெறும் ‘விசில் போடு’ (WHISTLE PODU) பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடலை நம்ம ‘தளபதி’ விஜய்யே பாடி அசத்தியிருக்கிறார். இப்பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]