கும்கி, சிகரம் தொடு, பொன்னியின் செல்வன் ஆகிய வெற்றிப்படங்களில் நடிதுள்ள நடிகர் விக்ரம் பிரபு சமீபத்தில் ‘Love Marriage’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர் கவுதம் மேனன், சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இவர்களுடன் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Loved every second of making this fun project ❤️!
— Vikram Prabhu (@iamVikramPrabhu) February 12, 2025
Here is the First Look of #LoveMarriage 💍❤️@sush_bhat94 @Meenakshidine0 & @thilak_ramesh ✨
Enjoy a delightful mix of humor and heartfelt moments as we navigate the quirky dilemmas of delayed love.
Coming to theatres this… pic.twitter.com/6JeITlUbHN
இப்படத்தின் முதல் பார்வை பிப்ரவரி 12 ம் தேதி படக்குழு வெளியிட்டது. மேலும் இது ரசிகர்களுக்கிடையில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. Love Marriage திரைப்படத்தை “ஒரு கிராமத்து பின்னணியில் குடும்பம் சார்ந்த நகைச்சுவையான பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்கியுள்ளோம்” என்று இயக்குனர் சண்முக பிரியன் தெரிவித்துள்ளார்.

நடிக்க தொடங்கியபோது காதல் படங்களில் பெரும்பாலும் நடித்துவந்த நடிகர் விக்ரம் பிரபு, காலப்போக்கில் ஆக்ஷன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவந்தார். கடைசியாக அவர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இப்போது மீண்டும் காதல் கதைக்களத்தில் நடிப்பது அவரது ரசிகர்களை மகிழ்விக்கும். ‘Love Marriage’ கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]