கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரம் கைவசம் ‘தங்கலான்‘, ‘துருவ நட்சத்திரம்’, ‘சீயான் 62’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் பா.இரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ படம் வருகிற ஜூன் 28-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
கெளதம் மேனன் இயக்கியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கு இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்காமல் ரிலீஸுக்கு வெயிட்டின் லிஸ்டிலையே தான் இருக்கிறது. அருண் குமார் இயக்கும் ‘சீயான் 62’ படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது.
மிக்க நன்றி.. for all the love pouring in today. Interesting updates .. இன்னும் சில தினங்களில்.
— Vikram (@chiyaan) April 12, 2024
Any guesses??
& don’t forget to ஓ போடு!! ❤️ pic.twitter.com/3wtq8Yrfbv
இந்நிலையில், விக்ரம் நடித்து 2002-ஆம் ஆண்டு வெளியாகி வேற லெவல் ஹிட்டான ‘ஜெமினி’ படம் ரிலீஸாகி இன்றுடன் (ஏப்ரல் 12-ஆம் தேதி) 22 ஆண்டுகள் ஆகி விட்டதை சீயானின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சரண் இயக்கியிருந்த இந்த படத்தை ‘ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது.
இதில் வில்லனாக கலாபவன் மணி அசத்தியிருப்பார். விக்ரமுக்கு ஜோடியாக கிரண் டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படத்தில் ஹைலைட்டாக அமைந்தது ‘ஓ போடு’ என்ற பாடல் தான். தற்போது, #22YearsOfGemini குறித்து நடிகர் விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் “உங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி…
சுவாரஸ்யமான அப்டேட்ஸ் இன்னும் சில தினங்களில்.. என்னவா இருக்கும்னு கெஸ் பண்ணுங்க & மறக்காம ‘ஓ போடு’ங்க!!” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பல ரசிகர்கள் ‘ஜெமினி’ திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகப்போகிறதா? என்று சீயானிடம் கேட்ட வண்ணமுள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]