Home Cinema News ரசிகர்களுக்காக ‘சீயான் 62’வின் மாஸ் அப்டேட் கொடுத்த விக்ரம்… வைரலாகும் போஸ்டர்!

ரசிகர்களுக்காக ‘சீயான் 62’வின் மாஸ் அப்டேட் கொடுத்த விக்ரம்… வைரலாகும் போஸ்டர்!

அருண் குமார் இயக்கும் 'சீயான் 62' படத்தின் அப்டேட் குறித்து நடிகர் விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

by Santhiya Lakshmi

கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரம் நடித்து முடித்திருக்கும் பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்’, கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு படங்களுமே ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ‘சீயான் 62’வை ‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா’ ஆகிய படங்களின் இயக்குநர் அருண் குமார் இயக்கப்போகிறாராம். இதில் முக்கிய ரோல்களில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு நடிக்கவுள்ளனர்.

ரியா ஷிபுவின் ‘HR பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கப்போகிறார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் டாப் கியரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ‘சீயான்’ விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டரை ஷேர் செய்து “லோடிங்… #CHIYAAN62” என்று பதிவிட்டிருக்கிறார். 

இந்த போஸ்டரில் விக்ரம் கையில் அருவா இருப்பது. மேலும், இன்னும் 2 நாட்களில் என்றும், ஏப்ரல் 17-ஆம் தேதியையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த தேதி விக்ரமின் பிறந்தநாள் என்பதால், அன்று இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வெளியாகப்போகிறது என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.