பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் HIT படங்கள் தந்த vikraman மகன் நடிக்கும் HIT LIST படத்தின் இசை வெளியிட்டு விழாவில் வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்.
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்திலிருந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த், மாதவன் போன்ற ஜாம்பவான்களை வைத்து புது வசந்தம், பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சூர்யவம்சம், வானத்தை போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குனர் vikraman. தமிழ் சினிமாவில் இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் இன்றும் ரசிக்கும் வகையில் தனித்துவமாக படங்களை எடுத்திருந்தார்.

தற்போது விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில், இசையமைப்பாளராக சத்யா, புதுமுக இயக்குனர்களான சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இயக்கும் “HIT LIST” படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், கெளதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பே பட ஷூட்டிங் தொடங்கப்பட்டு சில காரணங்களால் தடைப்பட்டிருந்த நிலையில் கே.எஸ். ரவிக்குமார் தற்போது இந்த படத்தை தயாரித்து வெளியிடவுள்ளார். மேலும் ரவிக்குமார் அவரின் உதவி இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குனர்கள், நடிகர்கள் என பல திரையுல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட HIT LIST படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, மிஷ்கின், பேரரசு, கதிர், பி. வாசு, சரண், எழில், தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதே போல நடிகர்கள் சந்தான பாரதி, பார்த்திபன், பாக்யராஜ், ரமேஷ் கண்ணா, சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோரும் பங்கு பெற்றனர்.
மேலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களும் தனி தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சமீபத்தில் சூர்யா வெளியிட்ட hit list படத்தின் ” I AM THE DANGER” என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படம் காதல், காமெடி, சண்டை என அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]