Home Cinema News ‘சீயான் 62’வை இயக்கும் ‘சித்தா’ இயக்குநர்… டைட்டில் அறிவிப்பு டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

‘சீயான் 62’வை இயக்கும் ‘சித்தா’ இயக்குநர்… டைட்டில் அறிவிப்பு டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

by Santhiya Lakshmi

கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரம், ‘தங்கலான்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சீயான் 62’ என மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இதில் ‘சீயான் 62’வை ‘சித்தா’ இயக்குநர் அருண் குமார் இயக்கப்போகிறாராம்.

இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கை இம்மாத இறுதியில் இருந்து துவங்க இயக்குநர் அருண் குமார் ப்ளான் போட்டிருக்கிறார்.

tnm import sites default files Vikram 1200

இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி ‘சீயான்’ விக்ரமின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸாகப்போகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிக்கப்போகிறார்கள். ரியா ஷிபுவின் ‘HR பிக்சர்ஸ்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.