கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரம் நடித்திருக்கும் பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்’, கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய 2 படங்களுமே ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் தான் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ‘சீயான் 62’வை ‘சித்தா’ இயக்குநர் அருண் குமார் இயக்கப்போகிறார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
#Chiyaan62 is now #VeeraDheeraSooran Part -2,
— HR Pictures (@hr_pictures) April 17, 2024
Wishing our dearest @chiyaan a very happy birthday!
Presenting the fiery title teaser for you all 🔥
https://t.co/C4ytHeCoNA#HBDChiyaan #காளி #Kaali 🧨#HBDChiyaan
#SUArunkumar @iam_SJSuryah #surajvenjaramoodu @gvprakash… pic.twitter.com/egX5pyfYiU
தற்போது, இந்த படத்துக்கு ‘வீர தீர சூரன்’ பார்ட் 2 என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான ‘HR பிக்சர்ஸ்’ஏ தங்களது எக்ஸ் பக்கத்தில் அறிவித்ததுடன், இன்று (ஏப்ரல் 17-ஆம் தேதி) விக்ரமின் பர்த்டே என்பதால் இப்படத்தின் டைட்டில் டீசரையும் வெளியிட்டுள்ளது.
To Watch the Teaser Click Here
செம மாஸான இந்த டீசர் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது. இப்படத்தில் முக்கிய ரோல்களில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]