தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொடங்கி வெள்ளி திரையில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் இவரது நடிப்பில் ‘அமரன்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்க, உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் படத்தை தயாரித்து வருகிறது. அமரனுக்கு அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் பலர் இணைந்து நடித்து வரும் நிலையில் தற்போது Vikranth இணைந்திருக்கிறார். ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள இவர் தளபதி விஜயின் சித்தி மகன் என்பது குறிப்பிடப்பட்டது. விக்ராந்த் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான இந்தி வில்லன் வித்யூத் ஜம்வால் மற்றும் மலையாள நடிகர் பிஜு மேனன் ஆகியோர் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]