துணை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகர் Vimal படத்தின் முதன்மை நாயகனாக களம் இறங்கிய முதல் தமிழ் திரைப்படம் “பசங்க”. 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் ‘மீனாட்சி சுந்தரம்’ என்ற கதாபாத்திரத்தில் மிகவும் எளிமையான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து, 2010ல் A.சற்குணம் இயக்கத்தில் வெளியான “களவாணி” திரைப்படம் தான் Vimal 24 வருட திரைப்பயணத்தில் மைல் ஸ்டோன் ஆக இன்று வரை இருந்து வருகிறது. “தூங்கா நகரம், எத்தன், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா” போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அவருக்கு நல்ல ஏற்றத்தை கோலிவுட்டில் வழங்கியது.
கல்வி, மனித உரிமை மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு போன்ற கருப்பொருள்களை கொண்ட 2011 ஆம் ஆண்டு வெளியான “வாகை சூட வா” திரைப்படத்தில் ஆற்றல் மிக்க இளைஞனாக நடித்து சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்தார் இருப்பினும் அவை எதுவும் அவரின் வெற்றிக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. க்ரைம் த்ரில்லர் பின்னணியில் உருவாக்கப்பட்ட “விலங்கு” வெப் தொடரில் பரிதியாகவே வாழ்ந்த காரணத்தால் இந்த தொடர் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது மீண்டும் நடிகர் Vimal நடிப்பில் அடுத்து என்னென்ன படங்கள் வருகை தர உள்ளது என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
1.படவா
ஆக்ஷன், ரொமான்டிக் டிராமா திரைப்படமாக 2025 ஆம் ஆண்டு என்று எதிர்பார்க்கப்படும் திரைப்படம் தான் “படவா”. பக்கா வணிக திரைப்படம் என்பதால் எல்லா விதமான உணர்வுகளையும் வெளிக்காட்டும் வண்ணம் ட்ரைலர் அமைந்துள்ளது. ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ திரைப்படத்தில் நாம் பார்த்த சூரி, விமல் காம்போ இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். மகிழ்ச்சியான நாயகன் வாழ்க்கையில் திடீரென நுழையும் வில்லன் அதனால் நிகழும் சம்பவங்கள் என்னென்ன என்பதே கதைக்கரு.
- நடிகர்கள் – விமல், சூரி, ஸ்ரீதா ராவ், KGF ராம், தேவதர்ஷினி
- இயக்குனர் – K.V.நந்தா
- இசை – ஜான் பீட்டர்
- தயாரிப்பு – ஜே இன்டர்நேஷனல்
- வெளியாகும் நாள் – TBA
2.பரமசிவன் பாத்திமா
இதுவரை வெளியான போஸ்டர் மற்றும் ப்ரோமோ அடிப்படையில் ‘பரசிவன் பாத்திமா’ திகில் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்ட காணொளியில் விமல் மற்றும் சாயா தேவி சிவ ரிஷிகளுக்கு மத்தியில் மிகவும் உக்கிரமாக இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
- நடிகர்கள் – விமல், சாயா தேவி, சேஷ்வித்தா ராஜு, MS பாஸ்கர்
- இயக்குனர் – இசக்கி கார்வண்ணன்
- இசை – தீபன் சக்கரவர்த்தி
- தயாரிப்பு – லட்சுமி கிரியேஷன்ஸ்
- வெளியாகும் நாள் – TBA
3.பெல்லடோன்னா
நடிகர் Vimal நடிப்பில் வெளியாக காத்திருக்கும் புதுமையான கதைக்களத்தை கொண்ட மற்றொரு சூப்பர் நேச்சுரல், ஹாரர் படம் ‘பெல்லடோன்னா’.
- நடிகர்கள் – விமல், தேஜஸ்வினி சர்மா, மாக்ஸினா பௌனம்
- இயக்குனர் – சந்தோஷ் பாபு முத்துசாமி
- இசை – AC ஜான் பீட்டர்
- தயாரிப்பு – Euphoria Flicks
- வெளியாகும் நாள் – TBA
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]