Home Cinema News ஆக்ஷனில் பட்டையை கிளப்பும் விஷால்… வெளியானது ‘RATHNAM’ படத்தின் ட்ரெய்லர்!

ஆக்ஷனில் பட்டையை கிளப்பும் விஷால்… வெளியானது ‘RATHNAM’ படத்தின் ட்ரெய்லர்!

விஷால் - ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்திருக்கும் 'ரத்னம்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது.

by Sivaanantham RB

கோலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ‘புரட்சி தளபதி’ விஷால். இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘ரத்னம்’ஐ பக்கா கமர்ஷியல் இயக்குநர் ஹரி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இதற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் – ஜீ ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்தை வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில், இன்று இதன் ட்ரெய்லரை விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். விஷால் ஆக்ஷனில் பட்டையை கிளப்பியிருக்கும் இந்த ட்ரெய்லர் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் மீட்டரையும் கூட்டியிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.