Home Cinema News ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிக்கும் விஷாலின் ‘ரத்னம்’ படத்தின் ‘எதனால’ பாடல்!

ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிக்கும் விஷாலின் ‘ரத்னம்’ படத்தின் ‘எதனால’ பாடல்!

by Sivaanantham RB

புரட்சி தளபதி’ விஷால் நடிப்பில் பரபரப்பாக ரெடியாகி வரும் புதிய படம் ‘ரத்னம்’. பிரபல இயக்குநர் ஹரி இயக்கி வரும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் டூயட் பாடி ஆடியுள்ளார்.

இதில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார், சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதனை ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் – ஜீ ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் முதல் சிங்கிள் டிராக் மற்றும் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்தது.

தற்போது, இப்படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக்கை (‘எதனால’) வெளியிட்டுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். மிக விரைவில் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.