Home Cinema News லண்டனில் துப்பறிய நாள் குறித்த டிடெக்டிவ் விஷால்!

லண்டனில் துப்பறிய நாள் குறித்த டிடெக்டிவ் விஷால்!

விஷால் இயக்கி, நடிக்கும் 'துப்பறிவாளன் 2' படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது.

by Santhiya Lakshmi

கோலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான ‘புரட்சி தளபதி‘ விஷால் நடிப்பில் தயாராகி, வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகப்போகும் திரைப்படம் ‘ரத்னம்’. இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்க, இதில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் டூயட் பாடி ஆடியிருக்கிறார்.

Thupparivalan 2

இதனைத் தொடர்ந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ‘துப்பறிவாளன் 2’. இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற மே 5-ஆம் தேதி முதல் லண்டனில் துவங்க விஷால் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா தான் இசையமைக்கப்போகிறாராம்.

இதில் விஷாலுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கப்போகிறார். 2017-ஆம் ஆண்டு வெளியாகி வேற லெவல் ஹிட்டான இதன் முதல் பாகத்தை மிஷ்கின் இயக்கியிருந்ததும், பார்ட் 2-விலும் விஷாலுடன் சேர்ந்து அவர் பணியாற்றுகையில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின் விலகியதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.