பிரவீன் கே இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் , மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் தான் ‘ஆர்யன்’. 2022 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவுக்கு வந்துள்ளது. இப்படம் ஒரு கிரைம் திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் திரையுலகில் ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘கட்டா குஸ்தி’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் ‘லால் சலாம்’ படத்திற்குப் பிறகு, ‘ஆர்யன்’ திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவர் கிரைம் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னரே விஷ்ணு விஷால் ‘ராட்சசன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் எனக் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை விஷ்ணு விஷால் தனது Vishnu Vishal Studioz தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். ‘ஆர்யன்’ திரைப்படம் கொலை பற்றிய கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரில்லர் திரைப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
From creating cult classics to commanding the screen with intensity—wishing @selvaraghavan sir a power-packed birthday! 🎬
— Vishnu Vishal Studioz (@VVStudioz) March 5, 2025
Team #Aaryan wishes you another year of blockbusters and cinematic brilliance! 🔥#HBDSelvaRaghavan pic.twitter.com/7nz89APZEX
இப்படத்திற்கான ட்ரைலர், டீஸர் மற்றும் வெளியீட்டுத் தேதி போன்ற அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆர்யன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்யன் படக்குழு
நடிகர்கள் | விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் |
இயக்குனர் | பிரவீன் கே |
தயாரிப்பு நிறுவனம் | Vishnu Vishal Studioz |
இசையமைப்பாளர் | சாம் சி எஸ் |
வெளியீட்டு தேதி | TBA |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]