கோலிவுட் சினிமாவில் கமல் & கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் & முத்துராமன், விஜய் & லோகேஷ் கனகராஜ், அஜித் & விஷ்ணு வரதன் என சில நடிகர் மற்றும் இயக்குனர் கூட்டணி காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும். இவ்வாறு இந்த வரிசையில் இணைந்த கூட்டணி தான் நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம் குமார். 2014 ஆம் ஆண்டு வெளியான ‘முண்டாசுப்பட்டி’ ஒரு புகைப்படத்தை வைத்து காமெடி சரவெடியாக அமைந்து ட்ரெண்ட் செட்டிங் படமாக அமைந்தது.
அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘ராட்சசன்’. இதற்கு முன் வெளியான படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட திகில் நிறைந்த திரில்லர் கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ஆண்டின் ட்ரெண்ட் செட்டிங் படமாக அமைந்தது. அதன் பிறகு பலவிதமான இன்வெஸ்டிக்டிவ் திரில்லர் திரைப்படங்கள் பல வெளியாகியது. இருப்பினும் ரசிகர்கள் மனதை ‘ராட்சசன்’ அளவு திருப்தி படுத்தவில்லை என்றே கூறலாம்.
Read More: Kaithi 2 – நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைகிறது!
Irandu Vaanam – ஆர்வத்தை தூண்டும் போஸ்டர்
Elated to present you all 'IRANDU VAANAM' from your beloved combo of Vishnu Vishal & director Ramkumar after Mundasupatti & Ratsasan.Starring the talented & the sensational Mamitha Baiju💚
— Sathya Jyothi Films (@SathyaJyothi) March 15, 2025
A Dhibu Ninan Thomas Musical 🎶@TheVishnuVishal @_mamithabaiju @dir_ramkumar… pic.twitter.com/GN4X4SJz1r
தற்போது நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம் குமார் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள படத்தின் அறிவிப்பு போஸ்டரை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ வெளியிட்டது. ‘Irandu Vaanam’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ரொமான்டிக் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், போஸ்டரில் காண்பிக்கப்பட்டுள்ளது நாயகன் & நாயகி நேருக்கு மாறாக தலைகீழாக இருக்கும் காட்சி, இந்த படத்தின் மீதான சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது. ஒருவேளை Sci-Fi கலந்த காதல் கதையாக இருக்கக்கூடும்.
Read More: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ படத்தின் அப்டேட்!
‘தளபதி 69’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மமிதா பைஜூ, ‘Irandam Vaanam’ படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Irandu Vaanam – படக்குழு
நடிகர்கள் | விஷ்ணு விஷால், மமிதா பைஜூ |
இயக்குனர் | ராம் குமார் |
தயாரிப்பு | Satya Jyothi Films |
இசை | திபு நினன் தாமஸ் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]