வித்தியாசமான கதைக்களத்தில் பெரிய அளவில் ஆரவாரம் இல்லாமல் படத்தின் கதைக்கு தேவையானதை சிறப்பாக அமைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.
விஷ்ணு விஷாலின் வித்தியாசமான தோற்றத்தில் 2014 – ஜூன் 13-ல் வெளியான படம் Mundasupatti. மாறுபட்ட கதைக்களத்தில் ராம் குமார் இயக்கத்தில், சி.வி. ராம் குமார் தயாரிப்பில் வெளியானது. விஷ்ணு விஷால், நந்திதா, காளி வெங்கட், முனீஷ்காந்த், ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியானது,
1980-களில் நடக்கும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. முண்டாசுப்பட்டி என்ற ஒரு கிராமத்தில் போட்டோ எடுப்பதற்கு பயந்து வாழ்ந்து வரும் கிராம மக்கள். அப்படி போட்டோ எடுத்தால் சீக்கிரம் இறந்து விடுவார்கள் என்ற மூட நம்பிக்கையில் உள்ளனர்.
விஷ்ணு விஷால் மற்றும் காளி வெங்கட் இருவரும் போட்டோ கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். முண்டாசுப்பட்டி ஊரில் இருந்து பள்ளிக்கு வரும் நந்திதா 12-ஆம் வகுப்பு முடிக்கும் நிலையில் பள்ளியில் உள்ள அனைவரும் போட்டோ எடுக்க வரும் போது நந்திதா மட்டும் வரவில்லை.
அங்கு போட்டோ எடுக்கவந்த விஷ்ணு விஷால் இதனை அறிந்து என்ன காரணம் என தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். எங்கள் ஊரில் போட்டோ எடுத்தால் சீக்கிரம் இறந்து விடுவார்கள் என்று அனைவரும் நம்பி வருகின்றனர் என நந்திதா கூறுகிறார்.

பின்னர் முண்டாசுப்பட்டி ஊரின் தலைவர் வயது முதிர்ச்சி காரணமாக இறக்கும் நிலையில் இருக்கும் போது நியாபகம் வைத்துக்கொள்ள போட்டோ எடுக்க வேண்டும் என ஊரில் உள்ளவர்கள் முடிவு செய்கின்றனர். அப்போது விஷ்ணு விஷாலை அழைத்து போட்டோ எடுக்க போது ஊரில் உள்ள அனைவரும் கேமராவை பார்த்து பயந்து ஓடி விடுகின்றனர். அங்கு நந்திதாவை பார்க்கும் விஷ்ணு விஷால் நந்திதா மீது காதல் ஏற்படுகிறது.
போட்டோ எடுத்த பின்னர் கேமராவை கடையில் வைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்று விடுகின்றனர். எதிர்பாராமல் போட்டோவை சில காரணங்களால் தவற விடுகின்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் போது முனீஷ்காந்த் படவாய்ப்பு தேடுவதற்காக போட்டோ எடுக்க வந்தார். முனீஷ்காந்த் பார்ப்பதற்கு முண்டாசுப்பட்டி ஊர் தலைவர் போல இருப்பதால் அவரை வைத்து போட்டோ எடுத்து விடுவார்கள்.
கடைசியில் முனீஷ்காந்த் அந்த ஊரை சேர்ந்தவராக இருப்பார். இதனை எதிர்பார்க்காத விஷ்ணு விஷால், காளி வெங்கட் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பார்கள். இவ்வாறு நடந்ததை ஊர் மக்களிடம் முனீஷ்காந்த் கூறிவிடுவார்.

இவ்வாறு செய்ததற்கு தண்டனையாக கிணறு தோண்டும்படி ஊர்மக்கள் தண்டனை தருவார்கள். கிணறை தோண்டி முடித்தார்களா, அங்கு இருந்து தப்பித்தார்களா, விஷ்ணு விஷால் மற்றும் நந்திதா காதலித்தார்களா என பல கேள்விகளுடன் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருப்பார்.
இதற்கிடையில் முண்டாசுப்பட்டி ஊரில் தெய்வமாக வணங்கி வரும் வானமுனி என்ற தெய்வத்தை அந்த பகுதியில் உள்ள ஆனந்தராஜ் ஆட்கள் திருடி கொண்டு சென்றுவிடுவார். அதனை மீட்டு முண்டாசுப்பட்டி ஊரை காப்பாற்றினார்களா என்பது தான் மீதி கதை.
“நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சிறுகதையை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. காளி வெங்கட், முனீஷ்காந்த் காமெடி, ஊர் மக்களில் நக்கல் பேச்சு, எதார்த்த நடிப்பு, ஆனந்தராஜ் நடிப்பு என படத்தில் அனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]