Home Cinema News  50 வருடத்திற்கு பிறகும் கொண்டாடும் VISU-வின் திரை படைப்புகள்…  

 50 வருடத்திற்கு பிறகும் கொண்டாடும் VISU-வின் திரை படைப்புகள்…  

அன்றைய காலகட்டத்தில் வரதட்சணை, மாமியார் கொடுமை, பெண் சுதந்திரம், மறுமணம் போன்றவற்றை Visu தனது படத்தின் மூலம் இந்த சமூகத்திற்கு சிறப்பாக காட்டியிருப்பார். தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வகையில் எதாவது ஒரு கருத்தை கூறியிருப்பார்.  

by Sudhakaran Eswaran

அன்றைய காலகட்டத்தில் வரதட்சணை, மாமியார் கொடுமை, பெண் சுதந்திரம், மறுமணம் போன்றவற்றை Visu தனது படத்தின் மூலம் இந்த சமூகத்திற்கு சிறப்பாக காட்டியிருப்பார். தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வகையில் எதாவது ஒரு கருத்தை கூறியிருப்பார்.  

Director Visu

80, 90 கால கட்டத்தில் மற்ற நடிகர்கள், இயக்குனர்கள் காதல், சண்டை, செண்டிமெண்ட் நிறைத்த படங்களை எடுத்து வெற்றி கண்டனர். இதற்க்கு விதிவிலக்காக விசு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், கணவன் மனைவி பாசம், தந்தை மகன் பாசம், தந்தை மகள் பாசம் என குடும்பங்கள் ரசிக்கும் படியாக படங்களை எடுத்து வெற்றி கண்டார். Visu இயக்கிய பெரும்பாலான படங்கள் குடும்பம் சார்ந்த கதையாகவே இருந்தது. சமூக பிரச்சனைகளை மிக அழகாக மக்கள் ரசிக்கும் படியாக படமாக எடுத்து வந்தார். 

அந்த வகையில் விசு இயக்கிய சமூக கருத்துக்கள் நிறைந்த படங்கள் 100 நாட்களை கடந்து தியேட்டரில் ஓடி சாதனை படித்தது. அவர் இயக்கிய படங்களை பார்க்கும் போது தனது குடும்பத்திலிலும்,சமூகத்திலும்  இத்தகைய பிரச்சனைகள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்றுகிறது.   

சம்சாரம் அது மின்சாரம்:

Samsaaram Adhu Minsaram poster

1986-ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் ஏ.வி.எம் ஸ்டூடியோ தயாரிப்பில் வெளியான படம் சம்சாரம் அது மின்சாரம்.  அப்பா, மகன் இடையே குடும்பத்திற்குள் நடக்கும் நிகழ்வை அழகாக காட்டியிருப்பார் விசு. விசு, லட்சுமி, கமலா காமேஷ், ரகுவரன், சந்திரசேகர், கிஷ்மு, மனோரமா, டெல்லி கணேஷ் போன்றோர் நடித்திருப்பார்கள். Visu , ரகுவரன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்படும் போது மிஸ்டர் அம்மையப்ப முதலியார் என ரகுவரனும், ரேடியோவில் பதிவு செய்து மிஸ்டர் சிதம்பரம் என்று விசு பேசும் வசனம் ரசிக்கும் படியாக இருந்தது. மேலும் மனோரமா, கிஷ்மு உரையாடும் காட்சியில் இருவரும் மிரட்டியிருப்பார்கள். சிறந்த தமிழ் படம், பிலிம்பேர் விருது என 25 வாரங்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி வெற்றி கண்ட படம். சிறந்த நடிகைக்கான விருது லட்சுமிக்கு இந்த படத்துக்காக வழங்கப்பட்டது. பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதமாகவும் இருந்தது. இறுதியில் கிளைமேக்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் அமைந்தது.       

சகலகலா சம்மந்தி:

Sakalakala Samandhi poster
Source: IMDb

1989-ல் Visu இயக்கத்தில் வெளியான படம் சகலகலா சம்மந்தி. மறுமணம் என்பது அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. விசு தனது எதார்த்த நடிப்பால் பெண்ணிற்கு மறுமணம் என்பது அவசியமான ஒன்று தான் என அழகாக கூறியிருப்பார். விசு, டெல்லி கணேஷ், ரஞ்சனி, சந்திரசேகர், மனோரமா, சரண்யா ஆகியோர் நடித்திருப்பார்கள். 

பெண்மணி அவள் கண்மணி:

Penmani aval Kanmani poster
Source: IMDb

1988-ஆம் ஆண்டு வெளியான பெண்மணி அவள் கண்மணி படம் சமூகத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை அழகாக காட்டியிருப்பார் Visu. மாமியார் கொடுமை, பொறுப்பற்ற தந்தை மகன், வரதட்சணை கொடுமை என குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை காமெடி கலந்து தீர்த்து வைக்கும் விதமாக படத்தை கொண்டு சென்றிருப்பார். பிரதாப், குட்டி பட்மினி, கிஷ்மு, வடிவுக்கரசி, டெல்லி கணேஷ், கமலா காமேஷ், ரமேஷ் அரவிந்த், மனோரமா ஆகியோர் நடித்திருப்பார்கள்.   

மணல் கயிறு:

download 3
Sorce: Red Talkies Tamil Cinema

1982-ஆம் ஆண்டு முதல் முறையாக இயக்குனராக Visu எடுத்த படம் மணல் கயிறு. அன்றய காலகட்டத்தில் நடுத்தர குடும்பத்தில் பெண்ணை திருமணம் செய்து வைப்பது என்பது கடினமான காரியம் என்பதை அழகாக கூறியிருப்பார். எஸ்.வி. சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா, கிஷ்மு, கமலா காமேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.   

குடும்பம் ஒரு கதம்பம்:

Kdumbam Oru Kadambam poster
Source: Wikipedia

1981-ல் விசு, பிரதாப், சுஹாசினி, கிஷ்மு, கமலா காமேஷ், எஸ்.வி. சேகர், சுமலதா, கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் குடும்பம் ஒரு கதம்பம். 80 களில் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் வாழும் 3,4 குடும்பங்களின் நிலையை செண்டிமெண்ட், காமெடி கலந்து எடுத்திருப்பார். குடும்பங்கள் ரசிக்கும் படியாக இருந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.    

டௌரி கல்யாணம்:

Dowry Kalyanam poster
Source: IMDb

1983-ல் விசு, ஸ்ரீவித்யா, விஜயகாந்த், கிஷ்மு, எஸ்.வி. சேகர், விஜி, புஷ்பலதா, நம்பியார் நடிப்பில் வெளியான படம் டௌரி கல்யாணம். வரதட்சணை பெற்று கல்யாணம் செய்யும் மாப்பிளை வீட்டில் பல பிரச்சனைகளை சரி செய்து கல்யாணத்தை முடித்து வைக்கும் விசு, ஸ்ரீவித்யா தம்பதியினர். செண்டிமெண்ட், காமெடி கலந்து அருமையாக படத்தை எடுத்திருந்தனர். 

வரவு நல்ல உறவு:

Varavu nalla Uravu poster
Souorce: IMDb

1990-ல் விசு, கிஷ்மு, அன்னபூரணா, ரேகா, வித்யாஸ்ரீ ஆகியோர் நடிப்பில் வெளியான படம் வரவு நல்ல உறவு. ஓய்வு பெற்ற தந்தையின் பணத்தை இரு மகன்கள், ஒரு மகள் ஆகிய மூவரும் பெற்றுக்கொண்டு பின் தந்தை, தாய் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வை சென்டிமெண்டாக எடுத்திருந்தனர். கிளைமேக்ஸ் காட்சியில் அனைவருக்கும் கண்ணீர்வர வைக்கும் விதமாக இருந்தது.   

வேடிக்கை என் வாழ்க்கை:

Vedikkai En Vaazkhai poster
Source: IMDb

1990-ஆம் ஆண்டு விசு இயக்கயத்தில் வெளியான படம் வேடிக்கை என் வாழ்க்கை. காவிச்சட்டை கந்தசாமி கதாபாத்திரத்தில் தனது தங்கையின் மகன் செய்யும் தவறை சுட்டிக்காட்டி ரசிக்கும் படியாக எடுத்திருப்பார் விசு. எஸ்.வி. சேகர், கிஷ்மு, மனோரமா, திலிப், ராகவ், ரேகா, பல்லவி, வடிவுக்கரசி ஆகியோரும் நடித்திருப்பார்கள்.  

பட்டுக்கோட்டை பெரியப்பா:

Pattukkottai Periyappa poster
Source: Rajshri Tamil

1994-ல் விசு, லட்சுமி, ஆனந்த் பாபு, மோஹினி, விவேக், விஜயா, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பட்டுக்கோட்டை பெரியப்பா. தனது தம்பி மகனின் திருமணம் நிறுத்தப்பட காரணம் அறிந்து அதை சரி செய்ய விசு செய்த நிகழ்வை அழகாக படமாக்கியிருப்பார்.  

காவலன் அவன் கோவலன்:

Kaavalan En Kovalan poster

1987-ல் விசு, பிரபு, ரேகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் காவலன் அவன் கோவலன். பிரபு இரண்டு வேடங்களில் பல குழப்பங்கள் ஏற்படும் விதமாக நடித்திருப்பார். அவரின் இரண்டு வேடங்களை கண்டறிந்து சரி செய்வதை காமெடி கலந்து எடுத்திருப்பார் விசு.   

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.