தனித்துவமான இசையமைப்பாளர்கள் தங்களுக்கான இடத்தை இசையுலகில் பிடிப்பது தமிழ் சினிமாவிற்கு இது முதல் முறையல்ல. அப்படி independent band ஆக இருந்த Vivek & Mervin கூட்டணி பின்னணி இசையமைப்பாளர்களாக 2014 ஆம் ஆண்டு வெளியான “வடகறி” திரைப்படத்தில் அறிமுகமாகினர்.
கதைகள் கூட சில சமயம் பார்ப்பதற்கு சலிப்பாக இருக்கக்கூடும். ஆனால், இசை மற்றும் பாடல் நம் அன்றாட வாழ்வில் நீங்க முடியாத ஓர் அங்கமாக இருப்பதால் ஒரு நாளில் குறைந்தது ஒரு பாடலையாவது கேட்பது ஒரு மனிதனின் சராசரி வாடிக்கை. அதனால் புதுவிதமான இசையை அரவனைப்பது இசை ரசிகர்களின் பண்பாகும். அப்படி இருக்கும் இசை ரசிகர்களை கவர்ந்த வெற்றிக் கூட்டணி Vivek & Mervin.
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘நெட்ஃப்ளிக்ஸ்’?
நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான “புகழ்” திரைப்படத்தில் இடம்பெற்ற “நீயே வாழ்க்கை என்பேன்” என்றே இனிமையான பாடலை இந்திய ரசிகர்களை விருப்பத்தை வென்ற பாடகர் அரிஜித் சிங் குரலில், கவிஞர் ந.முத்துக்குமார் எழுதிய காதல் உணர்ச்சி பொங்கும், எழில் மிகுந்த வரிகள் இன்றுவரை பலரின் playlist-ல் இடம் பெறக் காரணமாக உள்ளது.
அதை தொடர்ந்து Vivek & Mervin-ன் கூட்டணியில் வெளியான “கமலா கலாசா, என் சண்டைக்காரி நீதான், யாரையும் இவ்ளோ அழகா பாக்கல, எதிர் வீட்டு heroine நீ, புலரும், cute பொண்ணு follow me” போன்ற catchy ஆன பாடல்கள் இவர்களுக்கு மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது.
Vivek & Mervin-ன் independent ஆல்பம் பாடலாக வெளியான “ஒரசாத, காண்டு கண்ணம்மா, அழகியப் புயலே, வெண் சங்கோ” போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் viral ஆகி, பல ரசிகர்களால் பகிரப்பட்டு, reels கலாச்சாரத்தின் ட்ரெண்டியான பாடலாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
RaPo-22
இவர்களின் இசை பயணம் தற்போது மாநிலத்தை கடந்து ஒளிக்கப்போகிறது. “Bullet” பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ராம் போத்தினேனியின் “RaPo-22” என்று பெயரிடப்பட்டுள்ள, அவரின் அடுத்த திரைப்படத்திற்கு Vivek & Mervin இசையமைக்க உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு Vivek & Mervin அறிமுகமாகவுள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக படத்தின் நாயகன் ராம் போத்தினேனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Welcoming the ‘New Sound of Telugu Cinema” என்று பதிவிட்டுள்ளார்.

RaPo-22 திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அத்திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை பாக்கியஸ்ரீ போர்ஷே நடிக்கவுள்ளார். “Jaat” என்ற pan India படத்தை இயக்கும் கோபிசந்த் மல்லினெனி இந்த படத்தின் இயக்குனர் ஆவார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]