கூட்டத்தில் ஒருவராக சினிமா வாழ்வை தொடங்கிய Yogi Babu ஹீரோவாக தனது நடிப்பால் புகழின் உச்சியில் தற்போது இருந்து வருகிறார்.
நகைச்சுவை நடிகராக சினிமாவில் ரஜினி, அஜித்குமார், விஜய், சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பின்னர் தனக்கான கேரக்டரை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார் Yogi Babu.
மண்டேலா, கூர்கா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த Yogi Babu தற்போது வெளியான Boat படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார். மேலும் இவரது நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி பெற்றுள்ளது.

எதார்த்தமான டைமிங் காமெடி மூலம் பெரிய நடிகர்கள் சிறிய நடிகர்கள் வரை அனைவரிடமும் சகஜமாக காமெடி செய்து வரும் யோகி பாபு தற்போது மலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 முதல் நடந்து வந்ததாகவும், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.

மலை பகுதியில் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டதாகவும், மனிதனின் பேராசையால் இயற்கை வளங்களை அழித்து தனது சொந்த தேவைகளுக்கு இயற்கையை பலியாக்கும் கதைக்கருவை கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

யோகி பாபுவிற்கு ஜோடியாக கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன் நடிக்கவுள்ளார். மேலும் காளி வெங்கட், சிங்கம் புலி, ராமசந்திரன், பிரகதீஸ்வரன், செம்மலர் அன்னம், சதுர்த்திகா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.
#Malai Movie
— Lemon Leaf Creation Pvt Ltd (@lemonleafcreat1) August 7, 2024
The waiting is over. Malai movie on its track! September release!!!@Lemonleafcr @GaneshLemonLeaf @Soundarya1987 @iYogiBabu @lakshmimenon_ @IPMURUGESH @immancomposer @kaaliactor @SemmalarAnnam @bhaskarsakthi @onlynikil pic.twitter.com/j7lTrNNver
இப்படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த நிறுவனம் இதற்க்கு முன்பு அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான “ப்ளூ ஸ்டார்” என்ற படத்தை தயாரித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, D. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை IP முருகேஷ் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர்கள் சுசீந்திரன், சீனு ராமசாமி ஆகியோருடன் உதவி இயக்குனராக இருந்துள்ளார்.
படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும், படத்தின் பாடல்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. மலை படத்திற்கான மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
"The motion poster weaves a magical tapestry of forest life, inviting
— Lemon Leaf Creation Pvt Ltd (@lemonleafcreat1) August 21, 2024
you to explore its hidden wonders."".
Watch #Malai Motion Poster on YouTube!! https://t.co/vnDu3zLaix
⭐ing @iYogiBabu #LakshmiMenon @kaaliactor
A @immancomposer 🎹 musical @Lemonleafcr… pic.twitter.com/qlw1c1Qbcm

நீண்ட நாட்களுக்கு பிறகு லட்சுமி மேனன் நடித்த படம் வெளிவரவுள்ள நிலையில் அவருக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. மேலும் யோகி பாபு சட்னி சாம்பார் வெப் சீரிஸை தொடர்ந்து இந்த படத்திலும் கலக்குவார் என தெரிகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]