Home Cinema News படங்களை தொடர்ந்து Web Series -ல் என்டேர்டைன்மெண்ட் செய்ய வரும் Yogi Babu…

படங்களை தொடர்ந்து Web Series -ல் என்டேர்டைன்மெண்ட் செய்ய வரும் Yogi Babu…

லொள்ளு சபாவில் கூட்டத்தில் ஒருத்தராக திரையில் அறிமுகமான Yogi Babu தற்போது இவரை காட்டாத திரை இல்லை என்றே கூறலாம். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடியில் கலக்கி, ஹீரோவாகவும் நடித்து தற்போது Web Series ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  

by Sudhakaran Eswaran

லொள்ளு சபாவில் கூட்டத்தில் ஒருத்தராக திரையில் அறிமுகமான Yogi Babu, தற்போது இவரை காட்டாத திரை இல்லை என்றே கூறலாம். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடியில் கலக்கி, ஹீரோவாகவும் நடித்து, தற்போது Web Series ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  

தனது உடல், தோற்றத்தால் ஒதுக்கப்பட்ட Yogi Babu அதே உடல், தோற்றத்தை கொண்டு தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பாலிவுட் வரை சென்று அசத்தியுள்ளார். டைமிங் காமெடி, உடல் மொழி, நக்கல் என தான் நடிக்கும் படங்களில் நகைசுவை விருந்து  வைத்து வருகிறார்.  

அந்த வகையில் காமெடியில் மட்டுமல்லாமல் ஹீரோவாக நடித்த தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கலவையான விமர்சனம் தந்தன. மேலும் தற்போது web series பக்கம் திரும்பிய யோகி பாபு “சட்னி சாம்பார்” வித்தியாசமான டைட்டிலில் நடிக்கவுள்ளார்.  

மொழி, அபியும் நானும், பயணம், காற்றின் மொழி போன்ற வித்தியாசமான படைப்புகளை தந்த ராதா மோகன் Yogi Babu-வை வைத்து “சட்னி சாம்பார்” என்ற நகைச்சுவை விருந்து வைக்க காத்துக்கொண்டுள்ளார். 

Yogi Babu and Vani Bhojan

இந்த முறை படமாக அல்லாமல் web series மூலம் தனது படைப்பை தருகிறார். வாணி போஜன், சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல், நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர்  மற்றும் இயக்குநரான R. சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அதுபோக குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 

இந்த web series-க்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பற்று, “பிச்சைக்காரன்” மற்றும் “சிவப்பு மஞ்சள் பச்சை” போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த வெப் சீரிஸிற்கு இசையமைக்கவுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்து, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற மாஸ் ஹிட் படங்களில் பணியாற்றிய எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த சீரிஸிற்கு வசனங்களை எழுதவுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் ஜிஜேந்திரன் செய்யவுள்ளனர். 

இந்த காமெடி சீரிஸ் “டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்” OTT தளத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். பட பிடிப்பு வேலைகள் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் முடித்தவுடன் web series ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். 

இதற்கான first look போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் டைனிங் டேபிளில் Yogi Babu-வை சுற்றி மற்ற கேரக்டர்கள் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருப்பதைபோல போஸ்டர் இருந்தது.  

முக்கிய நடிகர்கள்:

யோகி பாபு,
வாணி போஜன்,
சந்திரமௌலி,
நிதின் சத்யா,
சார்லி,
குமரவேல்,
நிழல்கள் ரவி, 
மைனா நந்தினி,
தீபா சங்கர், 
சம்யுக்தா விஸ்வநாத்.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.