கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடிக்கும் புதிய படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்‘ (The GOAT)-ஐ இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க, இதில் விஜய்-க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துக் கொண்டிருக்கிறார்.
‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
Hey guys,
— Raja yuvan (@thisisysr) April 18, 2024
Thank you for the concerned messages. It's just a technical error, my team is trying to recover my Insta account and I'll be back soon 😊
Love, always!
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தில் இடம்பெறும் ‘விசில் போடு’ (WHISTLE PODU) பாடலை ரிலீஸ் செய்தனர். பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடலை விஜய்யே பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், பலரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து யுவனின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் டிஆக்டிவேட் செய்யப்பட்டது போல் காண்பிக்க, ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர். தற்போது, இது குறித்து யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தான் எனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது. என்னுடைய டீம் அதை சரி செய்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் திரும்ப வருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]