2018 -ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஜீ தமிழ் விருது வழங்கும் விழாவில் சின்னத்திரை கலைஞர்களை கௌரவ படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் 2024 -ஆம் ஆண்டிற்க்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவில் சிறந்த நடிகர், நடிகை, காமெடியன், துணை நடிகர், வில்லன், வில்லி, சிறந்த சீரியல் என பல விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த மாதிரியான விருதுகள் சின்னத்திரை கலைஞர்களை ஊக்கப்படுத்துவதோடு அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்ட செல்ல உதவும்.
70 வது தேசிய விருதுகள்: சிறந்த இசையமைப்பாளர் விருது வென்றார் AR Rahman!
தமிழ் ரசிகர்களுக்கு சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்து ஜீ தமிழ் டிவி அதிகம் விரும்பி பார்க்கப்படும் சேனலாக இருந்து வருகிறது. TRP ரேட்டிங்கில் பட்டையை கிளப்பும் வகையில் சீரியல், ரியாலிட்டி ஷோ என 3 தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி வருகின்றனர்.
ஜீ தமிழ் குடும்ப விழாவில் சின்னத்திரை நடிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
Zee Tamil Kudumba Virudhugal 2024.
— Zee Tamil (@ZeeTamil) October 25, 2024
October 26 & 27 | Saturday & Sunday 4.30 PM.#ZeeTamilKudumbaVirudhugal2024 #MahaNadigai #ZeeTamil pic.twitter.com/9xCqeZ5QJE
பேவரைட் நடிகர் – கார்த்திக் ராஜ் – கார்த்திகை தீபம்
பேவரைட் நடிகை – வைஷ்ணவி மற்றும் ரேஷ்மா – வீரா & நெஞ்சத்தை கிள்ளாதே
பேவரைட் சீரியல் – கார்த்திகை தீபம்
பேவரைட் ஆன் ஸ்க்ரீன் ஜோடி – அருண் , வைஷ்ணவி
பேவரைட் வில்லி – சுபிக்ஷா – வீரா
சிறந்த நடிகர் – செந்தில் – அண்ணா
சிறந்த நடிகை – நித்யா ராம் – அண்ணா
சிறந்த சீரியல் – அண்ணா
சிறந்த வில்லன் – பூவிலங்கு மோகன் – அண்ணா
சிறந்த காமெடியன் – தாமரை – நினைத்தாலே இனிக்கும்
பெஸ்ட் ஆன் ஸ்க்ரீன் ஜோடி – சந்தியா & ராஜீவ் – சந்தியா ராகம்
மிகவும் புகழ்பெற்ற அம்மா – சந்தியா – சந்தியா ராகம்
மிகவும் புகழ்பெற்ற அப்பா – சிவகுமார் – வீரா
வெர்சடைல் நடிகை – ஸ்வாதி சர்மா
பாப்புலர் நடிகர் – ஜெய் ஆகாஷ்
மோஸ்ட் பாப்புலர் மருமகள் – ஆஷிகா
சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஸபா
சிறந்த ஸ்டைலிஷ் நடிகர் – கணேஷ் வெங்கட்
பெஸ்ட் எடிட்டர் – அருள்
சிறந்த புதுமுக நடிகர்கள் – பாவனா லஸ்யா, குரு
பெஸ்ட் ஸ்க்ரீன் பிலே – செல்வம்
இது மட்டுமல்லாது அர்ச்சனாவுக்கு 25 ஆண்டுகால சின்னத்திரையில் பயணித்ததற்காக 25 years of அர்ச்சனா என்று விருது வழங்கி கௌரவித்தது ஜீ தமிழ் தொலைக்காட்சி.