பொதுவாக எந்த ஒரு இரண்டாம் பாக திரைப்படம் வெளியாவதற்கு முன் அதன் முதல் பாகத்தை காண்பது வழக்கம். காரணம் அந்த கதையின் தொடர்ச்சியை மீண்டும் நினைவூட்டும் விதமாக அது அமையும். 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோலிவுட் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் “விடுதலை part-1” திரைப்படம் வெளியானது. இதில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த திரைப்படம் ott-யில் ‘Zee5’ செயலில் வெளியானது, ஆனால் அந்த செயலின் மாத சந்தா கட்டி இருந்தால் மட்டுமே காண முடியும் என்று இருந்த நிலையில், நேற்று Zee5 நிறுவனம் அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டது.
“இயக்குனர் வெற்றிமாறனின் சிறந்த படைப்பான “Viduthalai part-2” திரைக்கு வரவிருக்கிறது. Viduthalai part-2 திரைப்படத்தின் இறுக்கமான உலகத்திற்குள் செல்வதற்கு முன் நடந்த நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை நினைவூட்டும் விதமாக அதன் முதல் பாகம் ‘விடுதலை part-1’-ஐ தற்போது Zee5ல் இலவசமாக கண்டு மகிழலாம்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு முன் வெளியான போஸ்டரில் டிசம்பர் 13 முதல் ஜனவரி 1 2025 வரை இலவசமாக காணலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Viduthalai part-2 படத்திற்கான ஒரு முன்னோட்டமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என்றே கூறலாம். பலவிதமான சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் ‘Viduthalai part-2’ வெளியாகிவுள்ளது. இந்த படத்திற்கான சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.