Home Events ராக்ஸ்டார் அனிருத்தின் ‘Hukum’ – முதல் முறையாக தோஹாவில் நேரலை கச்சேரி!

ராக்ஸ்டார் அனிருத்தின் ‘Hukum’ – முதல் முறையாக தோஹாவில் நேரலை கச்சேரி!

ஏப்ரல் மாதம் முதல் முறையாக தோஹாவில் அனிருத் நடத்தும் இசைக்கச்சேரி நிகழ்ச்சி குறித்த விவரங்கள் ,மற்றும் டிக்கெட் பதிவு செய்யும் முறை பற்றிய தகவல்களை இணையத்தளபக்கங்களில் அனிருத் பதிவிட்டுள்ளார்.  

by M Abinaya

தமிழ் திரைப்பட இசையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தரின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பாதித்துள்ளன. இவர் பாடிய “Why This Kolaveri Di” என்ற பாடலிலிருந்து, சமீபத்திய “Jailer,” “Leo,” “Jawan” போன்ற ஹிட் படங்களின் பாடல்கள் வரை அனைத்துமே ரசிகர்களின் பிளேலிஸ்டில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 

செல்போன்களில் கேட்டு மகிழும் பாடல்கள் அனைத்தும் இசைக்கச்சேரியில் நேரலையாக கேட்டு வைப் செய்யவேண்டும் என்பது ரசிகர்கள் பலரின் கனவு. தற்போது, அதை நிறைவு செய்யும் வகையாக இசையமைபாளர்கள் அதிகளவு லைவ் கான்சர்ட் நடத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில், இசையமைபாளரும் பாடகருமான அனிருத் ‘Hukum’ என்ற இசைக்கச்சேரி பல நகரங்களில் நடத்தி வருகிறார். தற்போது அதன் லைவ் கான்சர்ட் ஏப்ரல் 11 ம் தேதி தோஹாவில் நடைபெறவுள்ளது.  Visit Qatar வழங்கும் இந்த சிறப்பான இசைக்கச்சேரியை Loud Lemon Events ஏற்பாடு செய்துள்ளது. இந்த கச்சேரியில் கலந்து கொள்வதற்கான விவரங்களையும் டிக்கெட் பதிவு செய்யும் தகவல்களையும் பாடகர் அனிருத் தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். 

Read More: ‘Vijay Antony Live Concert – லண்டன்’:முழு விவரம் இதோ! 

பாடகர் அனிருத் – ‘Hukum’ இசைக்கச்சேரியின் முழு விவரம் இதோ!

ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனிருத் முதல் முறையாக தோஹாவில் நடத்தும் லைவ் கான்சர்ட் விவரங்கள் பின்வருமாறு. 

Live Concert நடைபெறும் இடம்Lusail Sports Arena, Doho
நடைபெறும் நாள் 11 ஏப்ரல் 2025
டிக்கெட் பதிவு செய்யும் இணையதளம் events.q-tickets.com
டிக்கெட் விலை 150/200 QAR (Bronze/ Silver)
250/350/375 QAR(Gold/Platinum B/Platinum A/Diamond)
275 QAR (Fan Pit Standing)
400 QAR (VIP)
500 QAR (VVIP)
1000 QAR (VIP Lounge)
1500 QAR (VVIP Lounge)

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.