AR Rahman-ன் இசை இந்தியா மட்டும் அல்ல உலகத்தில் இருக்கும் அனைத்து இசை ரசிகர்களின் இதய கீதம் என்றே கூறலாம். திரைப்படங்களை தாண்டி பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் உலக நாடுகளில் நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கார்டனில் AR Rahman-ன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை அடுத்து பிப்ரவரி மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் AR Rahman-ன் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு அதன் அறிவிப்பு அவரின் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது.
“பிப்ரவரி 21 ஆம் தேதி 2025 அன்று ரியாத்தில் உள்ள திராப் பூங்காவிற்கு எங்கள் இசையைக் கொண்டுவருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! … ஆத்மார்த்தமான இசை அதிசயங்கள் நிறைந்த மறக்க முடியாத இரவுக்கு தயாராகுங்கள்” என்று தனது X மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏப்ரல் 10 ஆம் தேதி வருகிறது தனுஷின் “Idly Kadai”!!
January 30 – February 14: பல்வேறு ஓடிடிக்கு வருகை தரும் திரைப்படங்கள்!!
AR Rahman இசை நிகழ்ச்சியின் டிக்கெட் விவரங்கள்
இந்த நிகழ்ச்சியை காண விரும்புவோர் “ரெட் கார்பெட்” மற்றும் “டைமண்ட்” வகையான டிக்கெட்டுகளை பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் ரெட் கார்பெட் டிக்கெட் அமரலாம் அதை அடுத்து டைமண்ட் டிக்கெட் பெற்ற நபர்கள் மேடையின் அருகில் அமரவும், AR Rahman உடன் உரையாடவும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இருவகை டிக்கெட்டில் எதை வேண்டுமானாலும் Platinum டிக்கெட் பெற்ற நபரிடம் கொடுக்கலாம் அதற்கான பணம் அவர்களுக்கு திருப்பி அனுப்பப்படும்.
டிக்கெட் அமைப்பில் கூறப்பட்டுள்ள கோட்பாடுகள் அடிப்படையில் தங்களது டிக்கெட்டை கேன்சல் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஒவ்வொரு சீட்டிங் அதன் விலையின் விவரம் குறித்து வெளியிட்டுள்ளனர்.
- டைமண்ட்/Diamond – SAR 999
- கோல்ட்/Gold – SAR 499
- சில்வர்/Silver – SAR 299
- ப்ரோன்ஸ்/Bronze – SAR 99
- ஸ்டாண்டிங்/Standing – SAR 75
டிக்கெட்டுகளை platinumlist.net, erevent.sa, & arrliveinriyadh.com இந்த இணையதளங்களின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
நிகழ்ச்சியின் பிற விவரங்கள்
நடைபெறும் இடம் : Dirab Park, Riyadh
நாள் : பிப்ரவரி 21, 2025
நேரம் : 12.02 am – 11.02 pm
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]