வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாலாவது திரையரங்கம் செல்லும் வழக்கம் தற்போது குறைந்து விட்டது. அதற்கு மாற்றாக இசைக்கச்சேரி 2கே கிட்ஸ் புரியும் வகையில் கூறினால் ‘concert’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வழக்கம் பெருகி வருகிறது. பெருநகரம் மற்றும் நகராட்சிகளில் இந்த கான்செர்ட் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இசையமைப்பாளர்கள் தங்களுக்கான கான்செர்ட் ஏற்பாடு செய்து நடத்தி வரும் அதே நேரத்தில், இளைஞர்களின் விருப்பமான பாடகர்களும் தனியாக இசைக்கச்சேரி நடத்துகின்றனர்.
Read More ‘Vijay Antony Live Concert – லண்டன்’:முழு விவரம் இதோ!
சென்னையில் நிகழும் திறமைகளின் சங்கமம்!
அந்த வரிசையில் கோலிவுட்டில் தங்களின் தனித்துவமான குரலால் பல கோடி ரசிகர்களை சம்பாதித்துள்ள பாடகர்/பாடகி – பிரதீப் குமார், ஆண்ட்ரியா ஜெர்மியா, அனிஷ்/பால் டப்பா, அசல் கோளாறு ஆகியோர் ஒன்றிணைந்து மேடையில் பாடவிருக்கும் ‘KYN LIVE Concert’ வரும் 29 மார்ச் அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கண்டு கழிக்க கீழ்வரும் விவரங்கள் அடிப்படையில் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த அறிவிப்பு மெலடி & பீல் குட் பாடல்களை பாடி ஆஸ்தான ரசிகர் கூட்டத்தை உருவாகியுள்ள பிரதீப் குமாரை காண அவரது விசிறிகள் ஒருபுறம் காத்திருக்க, புதுமை மற்றும் அதிரடியான பாடல் வரிகளை தானே எழுதி Rap ஸ்டைலில் பாடி வரும் பால் டப்பா & அசல் கோளாறு என இருவேறு திறமைமிக்க இளைஞர்களை ரசிக்க தற்கால இளைஞர்கள் கூட்டம் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Read More: ராக்ஸ்டார் அனிருத்தின் ‘Hukum’ – முதல் முறையாக தோஹாவில் நேரலை கச்சேரி!
KYN LIVE Concert சென்னை – முழு விவரம்
நிகழ்ச்சியின் பெயர் | KYN LIVE Concert சென்னை |
இடம் | YMCA நந்தனம் |
நாள் | 29 மார்ச் 2025 (சனிக்கிழமை) |
நேரம் | மாலை 6.30 – இரவு 10 மணி |
டிக்கெட் வகை & விலை | Bronze – ₹699 Fan Pit 4 – ₹1099 Fan Pit 3 – ₹1999 Fan Pit 2 – ₹2999 Fan Pit 1 – ₹4099 VIP – ₹8999 |
டிக்கெட் பெறும் தளம் | KYN Hood |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com