IIFA Utsavam விருதுகள் விழா அபு தாபியில் உள்ள Yas தீவில் நேற்று தென்னிந்திய சினிமா பிரபலங்கள் வருகையால் பிரம்மாண்டமாக நடந்தது. 2023ம் ஆண்டில் வெளியான சிறந்த படங்களின் திறமைகளை கவுரவிக்கும் வகையில் செப்டம்பர் 27 இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் உள்ள திறமையாளர்களை கொண்டாடும் விழாவாக IIFA விருதுகளில் IIFA Utsavam விருதுகள் விழாவை 2016 முதல் தொடங்கினர். இதில் சிறந்த இயக்குனர், நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், பாடகர், பாடகி என சினிமா துறையில் உள்ள அணைத்து விதமான துறையினரையும் கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும்.
IIFA Utsavam விருதுகள் 2024 தமிழ் சினிமா விருதுகள் வென்றவர்கள்
சிறந்த படம் : Jailer
இயக்குனர் Nelson Dilipkumar இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய மிரட்டலான நடிப்பில், ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக வெளியாகிய ‘Jailer’ படத்துக்கு சிறந்த படத்துக்கான IIFA Utsavam விருது கிடைத்தது. இந்த விருதை இயக்குனர் Nelson மேடையில் பெற்றுக்கொண்டார்.
சிறந்த இயக்குனர் : மணிரத்னம்

கடந்த ஆண்டு பிரபல இலக்கிய நாவலான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய யக்குனர் மணிரத்னம், இரண்டாம் பாகத்துக்காக IIFA விருதை வென்றார். இந்த விருதுக்கான பரிந்துரைகளில் இயக்குனர் வெற்றிமாறன் (விடுதலை -1), நெல்சன் திலீப்குமார் (ஜெயிலர்), லோகேஷ் கனகராஜ் (Leo), கார்த்திக் சுப்பராஜ் (ஜிகர்தண்டா டபுள் X), R மந்திர மூர்த்தி (அயோத்தி) ஆகியோர் இடம்பெற்றனர்.
சிறந்த நடிகர் : விக்ரம்

பொன்னியின் செல்வன் -2 படத்தில் ஆதித்திய கரிகாலன் பாத்திரத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் விக்ரமிற்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இவருடன் இப்பிரிவில் நடிகர் ரஜினிகாந்த் (ஜெயிலர்), சூரி (விடுதலை -1), சிவகார்த்திகேயன் (மாவீரன்), கார்த்தி (பொன்னியின் செல்வன் (பொன்னியின் செல்வன் -2), சித்தார்த் (சித்தா) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
சிறந்த நடிகை : ஐஸ்வர்யா ராய்
பொன்னியின் செல்வன் -2 படத்துக்கு கிடைத்த 6 விருதுகளில் முக்கியமான விருதுகள் அடக்கம். நந்தினி என்ற மிக முக்கியமான பாத்திரத்தில் அபாரமாக நடித்த உலகழகி ஐஸ்வர்யா ராய், ‘சிறந்த நடிகை’ விருதை வென்றார். இந்த விருதுக்கான போட்டியில் இதே படத்தில் குந்தவையாக நடித்த நடிகை த்ரிஷா, ‘அன்னபூரணி’ படத்தில் நடித்த நடிகை நயன்தாரா, ‘Farhana’ படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘இறுக்கப் பற்று’ படத்துக்காக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ‘மாமன்னன்’ படத்துக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த இசையமைப்பாளர் : ஏ ஆர் ரஹ்மான்

பொன்னியின் செல்வன் பாகம் 1 & 2ல் உள்ள அணைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பக்கத்தில் சிறப்பாக இசையமைத்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது கிடைத்தது. இந்த விருதுக்காக ஜி வி பிரகாஷ் (அநீதி), அனிரூத் ரவிச்சந்தர் (ஜெயிலர்), இளையராஜா (விடுதலை), திபு நிணன் தாமஸ் & சந்தோஷ் நாராயணன் (சித்தா) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
சிறந்த வில்லன் நடிகர் : SJ சூர்யா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பு கிடைத்த ‘மார்க் ஆண்டனி’ படத்தில் அசரவைத்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் SJ சூர்யாவிற்கு ‘சிறந்த வில்லன் நடிகர்’ விருது கிடைத்தது. இவருடன் நடிகர் பஹத் பாசில் (மாமன்னன்), விநாயகன் (ஜெயிலர்), செல்வராகவன் (Farhana), அர்ஜுன் சார்ஜா (Leo) ஆகியோர் போட்டியிட்டனர்.
தென்னிந்திய IIFA Utsavam Awards 2024 செப்டம்பரில் நடைபெறவுள்ளது!
சிறந்த துணை நடிகர் : ஜெயராம்

பொன்னியின் செல்வன் -2 படத்தில் ஆல்வார்க்கடியான் நம்பி பாத்திரத்தில் சிறப்பாக நடித்த நடிகர் ஜெயராம் அவர்களுக்கு IIFA Utsavam விருதுகள் 2024 ‘சிறந்த துணை நடிகர்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான பரிந்துரையில் இதே படத்தில் நடித்த நடிகர் சரத்குமார், கவுதம் வாசுதேவ் மேனன் (விடுதலை -1), அழகம் பெருமாள் (மாமன்னன்), ரெட்டின் கிங்ஸ்லி (மார்க் ஆண்டனி) ஆகியோர் இருந்தனர்.
சிறந்த துணை நடிகை : சஹஸ்ரா ஸ்ரீ
‘சித்தா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களை படத்தோடு ஒன்றச் செய்தவர் குழந்தை நட்சத்திரமான சஹஸ்ரா ஸ்ரீ. பல முன்னணி நடிகைகளுடன் பரிந்துரைக்கப்பட்ட இவர், IIFA Utsavam விருதுகள் 2024 ‘சிறந்த துணை நடிகை’ விருதை வென்றார். இந்த பிரிவில் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் (ஜெயிலர்), ஐஸ்வர்யா லட்சுமி (பொன்னியின் செல்வன் -2), ரேச்சல் ரெபேக்கா (குட் நைட்), நடிகை சரிதா (மாவீரன்) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
‘Woman of the Year’ : சமந்தா ரூத் பிரபு

2010ல் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை சமந்தா, தற்போது ஹாலிவுட் கதைகளில் நடிக்கும் அளவிற்கு தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும், இத்தனை ஆண்டுகள் திரைத்துறையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார். சமீபகாலமாக உடல்நல குறைவால் நடிப்பதை குறித்துள்ள சமந்தாவை பாராட்டி IIFA Utsavam விருதுகள் 2024 ‘Woman of the Year’ விருது வழங்கப்பட்டது.
சிறந்த பின்னணி பாடகர் : ஹரிச்சரன்
பொன்னியின் செல்வன் படத்தில் பெரும் திருப்பமாக இருக்கும் தருணத்தில் வரும் ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலை கெட்டவர்கள் அனைவரும் மெய்ம்மறந்து படத்தின் கதையுடன் நம்மை பயணிக்க வைக்கும். இந்த பாடலை பாடிய பாடகர் ஹரிச்சரன் IIFA Utsavam 2024 ‘சிறந்த பாடகர்’ விருதை வென்றுள்ளார். இந்த விருதுக்கான பரிந்துரையில் பாடகர்கள் ஷான் ரோல்டன் (நான் காலி), அனிரூத் ரவிச்சந்தர் (Hukum) & (Badass), விஜய் யேசுதாஸ் (நெஞ்சமே நெஞ்சமே), விஷால் மிஷ்ரா (ரத்தமாரே) ஆகியோர் இருந்தனர்.
சிறந்த பின்னணி பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்
பாடகி சக்திஸ்ரீ கோபாலன், பொன்னியின் செல்வன் -2 படத்தில் பாடிய ‘அக நக’ பாடலுக்காக ‘சிறந்த பாடகி’ விருதை பெற்றார். இவருடன் பாடகிகள் சுவேதா மோகன் (வா வாத்தி), அனன்யா பட் (காட்டுமல்லி), ஷில்பா ராவ் (காவலய்யா) ஆகியோர் Nominate செய்யப்பட்டனர். சக்திஸ்ரீ கோபாலன் ‘அக நக’ மற்றும் ‘நெஞ்சமே நெஞ்சமே’ ஆகிய இரண்டு பாடல்களுக்காக nominate செய்யபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த பாடலாசிரியர் : சூப்பர் சுப்பு
ஜெயிலர் படத்தில் வெளியான அதிரடியான ‘Hukum’ பாடலை எழுதிய பாடலாசிரியர் சூப்பர் சுப்பு ‘சிறந்த பாடலாசிரியர்’ விருதை வென்றார். இவருடன் இந்த விருதுக்காக nominate செய்யப்பட்டவர்கள் இளங்கோ கிருஷ்ணன் (வீரா ராஜ வீரா), யுகபாரதி (நெஞ்சமே), இளையராஜா (காட்டுமல்லி), விஷ்ணு இடவன் (நான் ரெடி).
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]