இசைஞானி இளையயராஜா, ஆசியாவிலிருந்து முதல் முறையாக சிம்பொனி இசை எழுதி கச்சேரி நடத்திய நபர் என்ற பெருமையை அடைந்ததைத் தொடர்ந்து, இப்போது இளம் இசையமைப்பாளர் Lydian Nadhaswaram தன்னுடைய சிம்பொனி இசை படைப்பை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.
சிறுவயது முதல் இசை மீது ஆர்வம் கொண்டு இசைக்க குடும்பத்தில் வளர்ந்த Lydian Nadhaswaram, 2019ம் ஆண்டில் ஆங்கில சேனல் ஒன்றில் ‘The World’s Best’ என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய அசாதாரண பியானோ வாசிப்பில் முதல் பரிசை வென்று உலகளவில் இந்தியாவின் பெருமையை பரப்பினார். இவர் தற்போது சமீபத்தில் இசைஞானி அவர்கள் லண்டனில் தன்னுடைய முதல் சிம்பொனி கச்சேரி நடத்தியதைப் பற்றி பெருமையாக பேசி வாழ்த்தியது மட்டுமல்லாமல், தானும் தன்னுடைய முதல் சிம்பொனியை எழுதியுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தன்னுடைய X தளத்தில் ஒரு வீடியோ மூலம் இதனை பதிவிட்ட Lydian Nadhaswaram, இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி கச்சேரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அவரின் வாழ்க்கையில் இசைஞானியின் தாக்கம் பற்றியும் அவரை சிறு வயது முதல் இளையராஜா கொடுத்த ஊக்கம் பற்றியும் அவர் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து, Lydian Nadhaswaram எழுதி இசையமைத்து ஒருங்கிணைத்துள்ள ‘Symphony No. 1 – New Beginnings’ பற்றி அறிவித்தார்.
இளம் வயதிலேயே இப்படியான சாதனைகளைப் படைத்தது மட்டுமல்லாமல் தன்னுடைய திறமையால் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘Barroz: The Guardian of Treasures’ படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. Lydian Nadhaswaram தற்போது 19 வயதிலேயே தனியாக ஒரு சிம்பொனி இசையை எழுதி அமித்திருப்பது பாராட்டத்தக்க சாதனையாகும். இது வரை மிக இளம் வயதில் ஒரு சிம்பொனி இசையை எழுதியவர் அமெரிக்காவை சேர்ந்த 12 வயது சிறுமி ஆகும். இந்த Symphony No. 1 – New Beginnings, வரும் 21 ஜூன் 2026ல் வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]