2000த்தின் தொடக்கம் முதல் இப்போது வரை புத்துணர்ச்சியான பசுமையான பாடல்களை அமைத்து இசையமைப்பாளர் Harris Jayaraj தமிழ் மக்களை கட்டிப் போட்டுள்ளார். சினிமாவில் தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்தாலும், சக இசையமைப்பாளர்களைப் போலவே தன்னுடைய ரசிகர்களுக்காக ‘Rock On Harris’ Concert என்ற இசைக் கச்சேரியை நடத்தி வருகிறார். தமிழ் நாடு முழுவதும் சென்று பிரம்மாண்டமாக நடந்துவரும் இந்த இசைக் கச்சேரி தற்போது கோயம்பத்தூர் நகரில் நடக்கவுள்ளது.
கோயம்பத்தூரில் நடக்கும் ‘Rock On Harris’ கான்செர்ட்டின் டிக்கெட் பதிவு தொடங்கி பரப்பாக விற்றுவரும் நிலையில் VIP டிக்கெட்கள் 7799 ரூபாய் முதல் ECO Zone என்ற பின்வரிசை டிக்கெட்கள் 699 ரூபாய் வரை விற்பனைக்குள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் கச்சேரி நடக்கும் இடத்திற்கு முதலில் வருபவர்கள் அந்தந்த டிக்கெட்டின் விலைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ள இடத்தில எங்குவேண்டுமானாலும் நின்று பார்க்கலாம். ரசிகர்களின் ஆர்வத்தினால் 699 ரூபாய்க்கான டிக்கெட்களை புதிதாக அறிவித்துள்ளனர் கச்சேரி ஒருங்கிணைப்பாளர்கள்.
‘Rock On Harris’ Concert தேதி மற்றும் டிக்கெட் பதிவு தகவல்கள்
தேதி – 15 மார்ச்
இடம் – ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மைதானம், கோயம்பத்தூர்.
நேரம் – 6.30 PM
டிக்கெட் பெரும் தளம் – District By Zomato
டிக்கெட் விலைகள் – 7799 (VIP), 7679/ 2399 (GA +), 5999 (NG Zone), 5759 /1799 (GA), 3599 (Fan Pit), 899/ 699 (Eco Zone)
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]