2010ல் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு இயக்கத்தில் அறிமுகமாகி, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வெற்றிநடை போட்டு, பெரும்பாலான முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றிய நடிகையாக உருவானவர் நடிகை சமந்தா ரூத் பிரபு.

2024 IIFA விருதுகள் வரும் செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் அபு தாபியில் உள்ள யாஸ் தீவில் நடக்கிறது. இந்த விழாவில் நடிகை சமந்தா உடைய திரை பயணத்தை பாராட்டியம், கவுரவிக்கும் வகையில் ‘Women Of The Year’ என்ற விருதை வழங்க திட்டமிட்டுள்ளனர் IIFA விருது வழங்கு குழு.
தென்னிந்திய IIFA Utsavam Awards 2024 செப்டம்பரில் நடைபெறவுள்ளது!
தன்னுடைய முதல் பட நாயகனான நடிகர் நாக சைதன்யா அக்கினேனியை காதலித்து திருமணம் செய்துகொண்டவர், இருவருக்கு இடையில் ஏற்பட்ட மன கசப்பால், விவாகரத்து பெற்றார்கள். இந்த பிரிவிற்கு முன்பும் பின்பும் நடிகை சமந்தா உடைய தனிப்பட்ட மற்றும் சினிமா பயணமும் சற்றே பாதிக்கப்பட்டது.
ஆனால் அதையெல்லாம் கடந்து, தனக்கென ஒரு பாதையை அமைத்து பாலிவுட் வரை சென்று பிரபலமான நடிகையாக வளம் வருகிறார் சமந்தா. கடைசியாக 2023ல் வெளியான ‘குஷி’ படத்தில் நடித்தவர் அடுத்ததாக உலகளவில் பிரபலமான ‘Citadel : Honey Bunny’ என்ற சீரிஸ் மற்றும் ‘பங்காரம்’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]