இந்தாண்டு அபு தாபியில் நடக்கவுள்ள IIFA விருது வழங்கும் விழா நடக்கவுள்ளது. செப்டம்பர் 27 தொடங்கி மூன்று நாட்கள் நடக்கும் இந்த விருது வழங்கும் விழாவில், செப்டம்பர் 29ம் தேதி IIFA Rocks 2024 நிகழ்ச்சி நடக்கிறது.
The iconic trio, Shankar-Ehsaan-Loy is ready to steal your hearts with their melodies at Sobha Realty IIFA Rocks 2024 on 29th September #InAbuDhabi #YasIsland#IIFA2024 #NEXA #CreateInspire #SobhaxIIFA #EaseMyTrip pic.twitter.com/gIh7Ug8AAS
— IIFA (@IIFA) September 13, 2024
இந்த IIFA Rocks 2024 முற்றிலும் ஒரு இசை நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்வில் பிரபல பாடகர் Shankar Mahadevan தன்னுடைய இசை குழுவான S-E-L அதாவது Shankar–Ehsaan–Loy என்ற மூவரும் பாடவுள்ளனர். 90களின் புதுமையுடன் தொடங்கி இன்று வரை இந்த மூவரும் இந்திய சினிமா துறையில் பிசியாக பணியாற்றி வருகிறார்கள்.
தென்னிந்திய IIFA Utsavam Awards 2024 செப்டம்பரில் நடைபெறவுள்ளது!
தமிழில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தன்னுடைய முதல் பாடலான ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் Shankar Mahadevan. அதன் பின்னர் ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் பல அருமையான பாடல்களை பாடியுள்ளார்.

IIFA விருதுகள் நிகழ்வில் ஒவ்வொரு ஆண்டும் பல கலை நிகழ்ச்சிகள் நடந்தாலும், மாற்றமின்றி கண்டிப்பாக Shankar Mahadevan உடைய இசை கச்சேரி நடக்கும். அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு செப்டம்பர் 29ம் தேதி IIFA Rocks நிகழ்வில் இசைக்குழுவுடன் பாடவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர்கள் சித்தாந்த் சதுர்வேதி மற்றும் அபிஷேக் பானெர்ஜி தொகுத்து வழங்கவுள்ளனர். மேலும் இந்த ஈஸியா கச்சேரியுடன் இந்தாண்டிற்கான IIFA விருதுகள் நிகழ்ச்சி இனிதே முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]