Home Events TVK தலைவரும் நடிகருமான Vijay 10th, 12th மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா. 

TVK தலைவரும் நடிகருமான Vijay 10th, 12th மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா. 

இந்த ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை முதல்கட்டமாக இன்று சென்னையில் சந்திக்கிறார்!

by Vinodhini Kumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான Vijay, அரசியலில் நுழைந்து தன்னுடைய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தினார். அவரின் கட்சி வழியாக பல இடங்களுக்கு நேரில் சென்றும், அரசியல் ரீதியான நிகழ்வுகளைப் பற்றி கருத்துக்களை வலைதளத்தில் பகிர்ந்தும் வருகிறார். 

2024ல் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை சுயமாக தொடங்கி, பல சமூகநல செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார். அதில் முக்கியமானது மாணவர்களுடன் அவர் ஏற்பாடு செய்யும் சந்திப்பு. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்திவருகிறார். இந்த மாணவர் சந்திப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகிறார். அப்படி இந்த ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் சென்னை மற்றும் புதுச்சேரியில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவர்களுக்கான சந்திப்பை இன்று ஏற்பாடு செய்துள்ளார். இன்று காலை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீராமகிருஷ்ணா கன்வென்ஷன் செண்டரில் விழா தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு சான்றிதழோடு, வைர மோதிரம் பரிசாக வழங்கிவருகிறார் Vijay.

Vijay addresses students

மாணவர்களுக்கு விஜய் கொடுத்த அறிவுரை 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் Vijay இந்த சந்திப்பில் கலந்துகொண்டு சபையில் பேசினார். அதில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி, அடுத்ததாக எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பிடித்த படிப்பை தேர்ந்து படிக்கும்படி கேட்டுக்கொண்டார். பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத சில மாணவர்கள் தப்பான முடிவை தேடி செல்வது தவறு என்றும் ‘வெற்றி நிலையானது, தோல்வி நிலையில்லாதது’ என்றும் அறிவுரை கூறினார். 

Actor Vijay

எதிர்கால அரசியல் பற்றி Vijay

பள்ளி மாணவர்கள் அடுத்தக் கட்டமாக கல்லூரி படிப்பில் துறையை தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் இங்கு இயல்பான துறைகளான மருத்துவம், பொறியியல் என மட்டும் யோசிக்காமல் வருங்காலத்தில் நல்ல தலைவர்களாக வர என்ன தேவையோ அதை படிக்கவும் ஆலோசித்தார். ‘’தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான்… நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்’’ என்பதையும் அவரின் பேச்சில் பதிவிட்டார். அன்றாடம் செய்திகள் வழியாக நடக்கும் அரசியல் பற்றியும், எப்படி சமூக வலைதளங்களில் தீமையான கருத்துக்கள் பற்றியும் எப்படி பொய் பிரச்சாரங்கள் நடக்கிறது என்பதையும் பற்றி எடுத்துரைத்து, எதிர்காலத்தில் அரசியலையும் ஒரு துறையாக மாணவர்கள் கருத வேண்டும் என்று கூறினார் Vijay. 

போதைப்பொருள் பற்றி Vijay

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் போதை மருந்து புழக்கத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார் விஜய். இதில் பள்ளி படிக்கும்போதே நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்கவும், உடன் இருக்கும் நண்பர்கள் கெட்ட வழியில் சென்றால் அவர்களை நல்வழி படுத்த முயலவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ‘Say No to Temporary Pleasures’ அதாவது தற்காலிக சந்தோஷத்தை நோக்கி வாழாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடக்கவேண்டும் என்றும் ‘Say No To Drugs’ என்று போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்க செய்தார் விஜய். ஒரு பெற்றோர் என்ற கண்ணோட்டத்திலும் அரசியல் கட்சி தலைவர் என்ற கண்ணோட்டத்திலும் போதை பொருட்களின் தீங்கை கண்டித்து பேசினார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்‌. இவரின் அதிரடி பேச்சை தொடர்ந்து X தளத்தில் Say NO to Temporary Pleasures மற்றும் Say NO to Drugs வாசகங்கள் டிரெண்ட் ஆகி வருகிறது. 

Vijay with students

இன்று நடந்த மாணவர்கள் சந்திப்பில் அரசியல் பற்றி ஆழமாக பேசாமல் இளம் மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளையும் அவர்களின் வாழ்க்கையில் தேவையான செய்திகளையும் சுருக்கமாக பேசி முடித்த விஜய், பரிசு வழங்கும் முன் மாணவர்களுடன் மாணவராக உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது நாங்குநேரி சாதிய வன்கொடுமையால் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சின்னத்துரையுடன் உட்கார்ந்தும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மற்றொரு பக்கம் பார்வை குறைபாடு உள்ள ஒரு பள்ளி மாணவியுடன் அமர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. சென்னையில், திருவான்மியூரில் நடந்த இந்த சந்திப்பில் உடல் ஊனமுற்ற மாணவர்களும் கலந்துகொண்டனர். அவர்களையும் சந்தித்து வாழ்த்தினார் நடிகர் விஜய். 

சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவர்களை இன்று சந்தித்து, பரிசுகள் தந்த விஜய் அடுத்தக் கட்டமாக மற்ற மாவட்டங்களில் தேர்ச்சயடைந்த மாணவர்களை சந்திப்பார் என்றும் இந்த நிகழ்வில் தெரிவித்தார். மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தும் நிகழ்வுகளால் அவருக்கு ஏற்கனவே இருக்கும் இளைஞர்களின் ஆதரவை வழுபடுத்தி, 2026 தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரித்து வருகிறது விஜய். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.