Vijay Antony என்று சொன்னாலே ‘வைப்/Vibe’ என்ற சொல் பலரின் நினைவுக்கு வரும். அவர் ஆரம்ப கால திரைப்படங்களின் இசை மற்றும் பாடல்கள் தொடங்கி அவர் கதாநாயகனாக நடித்து வரும் தற்போது உள்ள படங்களில் உள்ள பல பாடல்கள் இசை ரசிகர்களின் பிளேலிஸ்டில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. தங்களின் கைபேசி அல்லது தொலைக்காட்சியில் கேட்டு ரசித்த பாடல்கள் கான்செர்ட் நிகழ்ச்சியில் கேட்க வேண்டும் என்ற பலரின் ஆசை நிறைவேறி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் மற்றும் வெளிநாடுகளிலும் Vijay Antony தனது இசைக் கச்சேரியை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் ‘Vijay Antony Live Concert’ நிகழ்ச்சியின் முழு விவரம் மற்றும் அந்த இசைக் கச்சேரியில் பங்கேற்க தேவையான டிக்கெட்டை பெறும் இணையதளம் குறித்த தகவல்களை, Noise and Grains என்ற மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
‘Vijay Antony Live Concert’ – முழு விவரம்
14 மார்ச் 2025, காலை 10 மணி முதல் (GMT முறை நேரப்படி) AXS Events என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். இதில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலங்கள், கோலிவுட் சினிமாவில் ஜொலித்து வரும் முன்னணி பாடகர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் பங்கேற்க உள்ள காரணத்தால் ரசிகர்கள் 14 மார்ச் தேதியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Live Concert நடைபெறும் நாள் | 2 மே 2025 |
நடைபெறும் இடம் | Ovo Arena Wembley, லண்டன் |
டிக்கெட் பெறும் இணையதளம் | AXS Events |
இந்த நிகழ்ச்சியை ‘Noise and Grains’ என்ற மீடியா நிறுவனம் நடத்துகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]