ராகவா லாரன்ஸ் செய்த பொது சேவைகளுக்கு அளவில்லை, கஷ்டம் என்று ஓடி வருவோருக்கு வாரி அளிக்கும் வள்ளல். இப்போது KPY பாலாவும் பலருக்கு சேவை செய்துள்ளார்.
பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து, பல குழந்தைகளை படிக்கவைப்பது போன்ற சமூக சேவை செய்து வருகிறார் பாலா. அவரின் இந்த உதவியை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இதை தொடர்ந்து இப்பொது பாலா அவரது இன்ஸ்டாகிராம் பக்கதில் மே 1 அன்று ராகவா லாரன்ஸ் தொடங்கவிருக்கும் “மாற்றம் உங்கள் சேவை” என்ற பொதுநல திட்டத்தில் நான் இணைய போகிறேன் நீங்களும் இணைந்திருங்கள், எல்லோருக்கும் கேக்குற உதவி போய் சேரவேண்டும், என்ற ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
‘மாற்றம் உங்கள் சேவை’ அரக்கட்டளையின் நலத்திட்டங்கள்
நடிகர் ராகவா லாரன்ஸ் ‘மாற்றம் உங்கள் சேவை’ (Maatram ungal sevai) என பொதுநல திட்டத்தை வைத்து பலருக்கு உதவி செய்துவருகிறார். சமூக வலைதளங்களில் அவர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து உதவி கேட்கும் மக்களுக்கு தொண்டு செய்வது பெரிதாக பாராட்டப்பட்டு வருகிறது.
இதில் சமீபத்தில் மாணவி ஸ்வேதா ஒரு வீடியோவில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடைய ‘மாற்றம் உங்கள் சேவை’ வழியாக தனக்கும் உதவும்படி கேட்டார். அந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ், ஸ்வேதாவை நேரில் சந்தித்து பேசினார். அவருக்கு கால் ஊனமுற்ற நிலையில் இருப்பதால் அதை குணப்படுத்த தேவையான வேலைகளையும் அதற்கான செலவையும் லாரன்ஸ் அவர்கள் ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல் அந்த மாணவி பள்ளிக்கு நடந்து செல்லாமல் இருக்க அவருக்கு ஒரு வண்டியையும் பரிசாக வழங்கினார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ பதிவாக வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com