தமிழ் தொலைக்காட்சிகள் மத்தியில் சீரியல் மற்றும் ரியாலிட்டி/கேம் ஷோக்கள் trp ரேட்டிங்கிற்காக கடும் போட்டி நிலவி வருகிறது இதனால் ஒவ்வொரு ஷோ மற்றும் சீரியல் முடிவு பெறுவதற்கு முன்பே அடுத்த சீரியல் மற்றும் சவுக்களின் முன்னோட்டம், அதன் ப்ரோமோ உள்ளிட்ட அறிவிப்புகள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைப்பது ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால், பிரபலமான ரியாலிட்டி ஷோவிற்கு அந்த அறிமுகம் தேவையில்லை அதன் ஒளிபரப்பே ரசிகர்களுக்கு போதுமானதாக இருக்கும். இப்படி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ “Andakakasam”.
Andakakasam – சீசன் 3
சென்ற வாரம் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கிய ‘start music 5’ முடிவடைந்த காரணத்தால் அதே நேரத்தில் இந்த வாரம் ஞாயிறு டிசம்பர் 29 ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு மா.கா.பா.ஆனந்த் தொகுத்து வழக்கில் கேம்/ரியாலிட்டி ஷோ “Andakakasam” கிராண்ட் லான்ச் செய்யப்படவுள்ளது. இந்த கேம் ஷோவின் முதல் சீசன் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.
இந்த கேம் ஷோவில் மொத்தம் மூன்று ரவுண்டு உள்ளது, இரு அணிகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறி, உள்ளே ஒரு அறையில் வைக்கப் பட்டிருக்கும் பலவிதமான பொருட்களை ஒரு சதுரத்தில் நிரப்பி கூறப்பட்ட மந்திரத்தை சரியாக கூறினால் அந்த அணி எடுத்த பொருட்களுடன் வெற்றி பெற்ற அணி என அறிவிக்கப்படும்.
இதில் பெரும்பாலும் விஜய் டிவி பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர், இந்த வாரம் தொடங்க உள்ள மூன்றாவது சீசனில் பங்கேற்கும் விருந்தினர்களின் glimpse ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் நடிகைகள், பரீனா, பிக் பாஸ் ஜூலி, நந்தினி, உமா, ரூபா ஸ்ரீ உள்ளிட்ட பலர் இந்த ப்ரோமோவில் காண்பிக்கப்படுகின்றன.
இந்த 3வது சீசனின் செட், மற்றும் சுற்றுக்களில் செய்யப்பட்டுள்ள பல மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
Andakakasam சீசன் 3: ஒளிபரப்பு விவரம்
கேம் ஷோ பெயர் | Andakakasam |
தொலைக்காட்சி | விஜய் டிவி |
Launch செய்யப்படும் நாள் & நேரம் | டிசம்பர் 29,2024 (ஞாயிற்றுக்கிழமை) & இரவு 8 மணி |
தொகுப்பாளர் | மா.கா.பா.ஆனந்த் |
OTT | Disney+Hotstar |