தமிழில் பிரபல செய்தி வாசிப்பாளராக தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் அனிதா சம்பத். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் அனிதா சம்பத் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அதில் அவர், ‘நான் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே பெரம்பூரில் தான் இருக்கிறேன். இப்போது என் அம்மா வீடும் பெரம்பூரில் தான் இருக்கிறது. வடசென்னைக்கு உள்ளே வருவது என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால் இன்று காலையிலிருந்து சென்னையை பார்க்க அவ்வளவு பயமாக இருக்கிறது. ஒரு தேசிய கட்சியின் தலைவரை அநியாயமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். ஏற்கனவே அவரை நாம் இழந்துவிட்டோம். இப்போது சரணடைந்திருக்கும் ஆறு பேர்தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது. இப்படிப்பட்ட கொடூரமான செயலில் ஈடுபட்டிருக்கும் அந்த நபர்கள் இது பெரிய பிரச்சினையாக மாறும் என்று தெரிந்தே செய்திருக்கிறார்கள் என்றால் இந்த மாதிரியான ஒரு குற்றத்தை முன்கூட்டியே திட்டம் போட்டு செய்திருக்க மாட்டார்கள் என்று எப்படி நம்புவது. ஒரு கட்சியில் இருக்கக் கூடிய அரசியல் பிரமுகர்களுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் சாதாரண மக்களால் எப்படி அச்சமில்லாமல் இருக்க முடியும்’ என்று அந்த வீடியோவில் அனிதா சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]